மீண்டும் வரலாறு படைத்தது கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகம்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகம் இந்தியாவிற்கு வந்த இரண்டாவது மிக உயர்ந்த டிராப்ட் (கப்பலின் அடிப்பகுதியில் இருந்து கடல் மட்டத்தின் உயரம்) கொள்கலன் கப்பலைக் கையாண்டதில் சாதனை படைத்துள்ளது. 16.95 மீட்டர் டிராப்ட் கொண்ட கப்பல் எம்எஸ்சி வர்ஜீனியா, ஞாயிற்றுக்கிழமை காலை விழிஞ்ஞத்திலிருந்து ஸ்பெயினுக்குப் புறப்பட்டது. இதன்மூலம் 18 மீட்டர் முதல் 20 மீட்டர் வரை இயற்கையான ஆழம் கொண்ட விழிஞ்ஞம் துறைமுகம் தனது திறனை உலகளாவிய கடல்சார் துறைக்கு நிரூபித்துள்ளது.