சிபிஎம் ஒருங்கிணைத்த போராட்டம் வெற்றி பெண்ணை பழங்குடி துவக்கப்பள்ளி திறப்பு
உதகை, செப். 8 – பழங்குடியின மக்களை ஏமாற்றி கையெழுத்து பெற்று மூடப்பட்ட பெண்ணை துவக்கப் பள்ளியை மீண்டும் திறக்க வேண் டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் முயற்சியால் இதர கட்சி களை இணைத்து நடத்திய போராட் டத்தையடுத்து, பெண்ணை துவக் கப்பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே பெண்ணை ஊராட்சி ஒன் றிய துவக்கப்பள்ளி 1996 முதல் செயல்பட்டு வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெண்ணை வனப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, பாலாப்பள்ளி என்னும் இடத்தில் 32 மாணவர்களுடன் பள்ளி தொடர்ந்து இயங்கி வந் தது. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் அதிகமாகப் பயின்று வந்த இப்பள்ளி, அவர்களுக்கு கல்விக்கான ஒரு முக்கிய மைய மாகத் திகழ்ந்தது. இந்நிலையில், 2025 - 2026 கல்வி யாண்டின் தொடக்கத்தில், பள்ளி யில் பயின்ற குழந்தைகள் அருகி லுள்ள வேறு பள்ளிகளுக்கு ரகசிய மாக மாற்றப்பட்டு, பள்ளியை மூடி னர். இங்குள்ள சில ஆசிரியர்கள் பழங்குடியின மக்களை ஏமாற்றி கையெழுத்து பெற்றதாகவும் குற் றச்சாட்டு வெளியானது. கல்வித் துறையின் இந்த திடீர் நடவடிக்கை, எவ்வித முன்னறிவிப்புமின்றி மேற்கொள்ளப்பட்டதால், அப் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் மத்தியில் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. பாலாப் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாற்றப்பட்ட மாணவர்கள் முறை யாக பள்ளிக்குச் செல்வதில் சிரமங் களை எதிர்கொள்கின்றனர். இது மாணவர்களின் கல்வி இடைநிற்ற லுக்கு வழிவகுக்கும், என மார்க் சிஸ்ட் கட்சி எச்சரித்தது. மேலும், தமிழக அரசு மாணவர்களின் கல்வி நலனில் அக்கறையுடன் செயல் பட்டு வரும் நிலையில், நீலகிரி மாவட்ட கல்வித்துறையின் இந்தச் செயல்பாடு கவலையளிக்கிறது. பழங்குடியினர் அதிகமாக வசிக் கும் பகுதியில் அவர்களின் குழந்தைகள் நலனுக்காக செயல் பட்டு வந்த பள்ளியை கல்வித்துறை திடீரென மூடியது அதிர்ச்சி அளிக்கி றது. எனவே, பெண்ணை பள்ளியை மீண்டும் திறந்து, பிற பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை இப்பள்ளி யிலேயே தொடர்ந்து கல்வி கற்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. மேலும், மாவட்ட நிர்வாகம் உள் ளிட்டு தொடர்புடைய அனைத்து துறையினரின் கவனத்திற்கும் கொண்டு சென்றது. இருந்த போதும், மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்காமல் இருந்தது. இதனையடுத்து, பெண்ணைப் பள்ளியை பாலாப் பள்ளியில் மீண் டும் திறக்க வேண்டும், பழங்குடி யினர் ஏமாற்றி கையெழுத்துபெற்ற ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் யோகன்னன் தலைமையில், அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற காத்திருப்பு போராட்டம் கடந்த மாதம் 30 ஆம்தேதி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, போராட் டத்தின் தீவிரத்தை உணர்ந்த, மாவட்ட பழங்குடியினர் நல அலுவ லர் பீட்டர் ஞானராஜ், மாவட்ட கல்வி அலுவலர் சின்னமாது, வட்டா ரக் கல்வி அலுவலர் மற்றும் பந்த லூர் வட்டாட்சியர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி, வரும் செப்டம்பர் 8ஆம் தேதி, பெண்ணை துவக்கப்பள்ளியை பாலாவி லுள்ள பள்ளியில் மீண்டும் திறக்கி றோம் என உறுதியளித்தனர். இதனையேற்று, போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப்பெற்றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தையடுத்து, திங்க ளன்று பெண்ணை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மீண்டும் திறக்கப் பட்டது. முன்னதாக, கூடலூர் வட்டார கல்வி அலுவலர் வாசுகி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந் நிகழ்விற்கு, அனைத்து கட்சியின் கூட்டமைப்பின் தலைவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான யோகண்ணன் தலைமை ஏற்றார். இதில், நெலா கோட்டை ஏரியா செயலாளர் ஏவி ஜோஸ், மாவட்டக் குழு உறுப்பினர் பத்மநாபன் மற் றும் நாசர், அதிமுகவின் பிரே மலதா, சிபிஐ கனி, பழங்குடியி னர் நல சங்கத்தின் ஒருங்கிணைப் பாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில், பள்ளியை மீண் டும் திறப்பதற்கான தொடர்ந்து போராட்ட களம் அமைத்த யோகண்ணனுக்கு, அப்பகுதி பழங் குடியின மக்கள் மாலை அணி வித்து வாழ்த்து தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.