ஜன சுராஜ் கட்சி வேட்பாளர் மீது தாக்குதல்
தேர்தல் வியூக வகுப்பாளர் பிர சாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி பீகார் சட்டமன்றத் தேர்தல் களத்தில் உள்ளது. அந்த கட்சியின் வேட் பாளர் டாக்டர்.விஜய் குப்தா போஜ்பூர் மாவட்டத்தின் ஆராவில் உள்ள ஒரு கிராமத்தில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது மர்ம நபர்கள் விஜய் குப்தா கல் வீசித் தாக்குதல் நடத்தினர்.இந்த சம்ப வத்தில் பிரச்சாரத்திற்கு வந்த ஒரு வாக னத்தின் முகப்புக்கண்ணாடி நொறுங்கி, கார் பலத்த சேதமடைந்தது. வேட்பாளர் விஜய் குப்தா மற்றொரு வாகனத்தில் இருந்ததால் காயமின்றி தப்பினார். மது போதையில் இருந்தவர்கள் இந்த தாக்கு தலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.