தில்லி முதல்வர் மீது தாக்குதல்
தில்லி முதல்வர் ரேகா குப்தா மீது புதனன்று தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறைதீர் கூட்டத்தின் போது கையில் ஒரு கோரிக்கை மனுவுடன் ஒருவர் முதல்வரிடம் சென்று உரத்த குரலில் கத்தி, பின்னர் முதல்வர் மீது தாக்குதல் நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக தாக்குதல் நடத்திய வர் நாய்கள் மீது பரிவு கொண்டவர் எனவும் தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்க நீதிமன்றம் கொடுத்த உத்த ரவுகளை அமல்படுத்தியதால் முதல்வர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படு கிறது. மேலும் தாக்குதல் நடத்தியவரின் உறவினர், அவர் மனநலம் பாதிக்கப் பட்டவர் எனக் குறிப்பிட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர் யார்? எதற்கு தாக்குதல் நடத்தினார் என்பது குறித்து அவரை கைது செய்து காவல்துறையி னர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்குப் பின் தலை மற்றும் கன்னத்தில் காயத்துடன் முதல்வர் ரேகா குப்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.