போபால், ஜன.29- தலித் மணமக்கள் குதிரை யில் ஊர்வலம் சென்றதற்காக, மத்தியப் பிரதேச மாநிலம் கனி யாரி கிராமத்தில் சாதியவாதி கள் வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள கனி யாரி கிராமத்தில் ‘லோதி தாக் குர்’ என்ற சமூகத்தினர் தங் களை உயர்ந்த வகுப்பினராக கருதி வருகின்றனர். திருமண நிகழ்வுகளில் மணமக்களை குதிரையில் அழைத்து செல்லும் மரபுகள் தங்களுக்கானது என் றும் சொல்லிக் கொள்கின்றனர். இந்நிலையில், கனியாரி கிராமத்தைச் சேர்ந்த திலிப் அகர்வார் என்ற இளைஞர், தனது திருமண நிகழ்வுக்காக குதிரை ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். இவர், பட்டி யல் வகுப்பைச் சேர்ந்தவர் என்ப தால், அவர் குதிரையில் ஊர்வ லம் செல்லக் கூடாது என்று லோதி தாக்குர் பிரிவினர் மிரட் டல் விடுத்துள்ளனர்.
எனினும், திலீப் அகர்வார், 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினரின் பாதுகாப்புடன், தனது மணவிழாவில் குதிரை யில் ஊர்வலம் சென்றுள்ளார். கனியாரி கிராம வரலாற்றில் தலித் ஒருவர் குதிரையில் ஊர் வலம் சென்றது இதுதான் முதல்முறை என்பதால், தங்கள் மீதான அடக்குமுறையில் விடிவு கிடைத்து விட்டதாக தலித் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், தலித் மணமக்க ளின் மணவிழா ஊர்வலம் முடிந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே மணமகன் திலீப் அகர்வாரின் வீட்டின் மீது சாதியவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, தற்போது வன் கொடுமை சட்டத்தின் கீழ் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய் யப்பட்டு 6 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு, ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டம் சாடி கிராமத்திலும், இதேபோல சாதியவாதிகளின் அடக்குமுறையை எதிர் கொண்டு, பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஸ்ரீராம் மேக்வால் - திரோ பதி தம்பதி குதிரை ஊர்வலம் சென்று, உரிமையை நிலை நாட்டினர் என்பது குறிப்பிடத் தக்கது.