states

மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை

மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக மம்தா பானர்ஜி உள்ளார். மாநிலத்தின் முதலமைச்சர் பெண்ணாக இருந்தாலும், அங்கு பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரு கின்றன. இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப மேலாண்மை வணி கக் கல்லூரியின் (ஐஎஐஎம்சி)  விடுதியில் தங்கி படித்து வரும் மாணவி ஒருவரை வெள்ளிக்கிழமையன்று ஆலோசனை அமர்வு என்றுகூறி, ஆண்களின் விடுதிக்கு இரண்டாமாண்டு மாணவர் ஒருவர் அழை த்துச் சென்றுள்ளார். அங்கு போதை மருந்து கலக்கப்பட்ட குளிர்பானத்தை மாணவிக்கு அளித்து, மாணவர் பாலி யல் வன்கொடுமை செய்துள்ளார். சுய நினைவு திரும்பியவுடன் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டி ருப்பதை உணர்ந்து, மாணவி ஹரி தேவ்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசார ணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிகளை விடுதிக்கு அனுப்ப மறுக்கும் பெற்றோர்கள் கடந்தாண்டு மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை க்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய் யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதே போல கடந்த மாதம் சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் கும்பல் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார். தற்போது வணிகக் கல்லூரியில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தின் மூலம் மாநி லத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக தொடர்ச்சியான பாலியல் சம்பவங்களால் தங்கள் பிள்ளைகளை விடுதியில் தங்கி படிக்க அனுமதிக்க பெற்றோர்கள் மறுத்து வருகின்றனர்.