states

img

தில்லியில் அங்கன்வாடி ஊழியர்கள் மகளிர் தினத்தன்றும் போராட்டம்

புதுதில்லி, மார்ச் 8- கோவிட் பெருந்தொற்று இருந்தபோதிலும் நாடு முழுவதும் லட்சக் கணக்கான குழந்தைகளுக்கு உணவளித்த அங்கன்வாடி ஊழியர்கள் மகளிர் தினத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2018ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்த ஊதிய உயர்வை அமல்படுத்தக் கோரியும், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் அங்கீகாரம் பெற்ற ஊழியர்களாக்கக் கோரியும் அகில இந்திய அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கூட்டமைப்பு (சிஐடியு) சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 90ஆவது நாளான மகளிர் தினத்தையொட்டி நாடு முழுவதும் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. முக்கிய போராட்டக் களமான அரியானாவில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக அரசும், போலீஸாரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தினாலும் போராட்டக்காரர்கள் பின்வாங்கவில்லை. கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஏ.ஆர்.சிந்து, தலைவர் உஷா குமாரி உள்ளிட்டோர் கொடூரமாக தாக்கப்பட்டனர். பேச்சு வார்த்தைக்கு முன்வராமல் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ள பாஜக அரசுகளை எதிர்த்துப் போராடுவது என அவர்கள் முடிவு செய்துள்ளனர்.