states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஆந்திராவுக்கு  ரூ.25,000 கோடி இறால் வர்த்தகம் பாதிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியா மீது விதித்துள்ள வரியால் ஆந்திராவில் இருந்து இறால் ஏற்றுமதி செய்யப்படும் 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான இறால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.  டிரம்ப் அறிவித்த 50 சதவீதமான வரியுடன் சேர்த்து ஏற்றுமதி இறால் மீதான அமெரிக்க வரி 59.72 சதவீதமாக உயர்ந்துவிட்டது. இதனால் ஏற்பட்டுள்ள விலை உயர்வு விற்பனை சரிவு ஆகிய வற்றின் காரணமாக அமெரிக்க நிறு வனங்கள் தங்கள் இறால் கொள்முதலில் சுமார் 50 சதவீதம் வரை ரத்து செய்து விட்டதாக ஆந்திர அரசு தெரி வித்துள்ளது.  இந்தியாவில் இருந்து வெளிநாடு களுக்கு ஏற்றுமதியாகும் இறாலில் சுமார் 80 சதவீதமான அளவு ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து ஏற்றுமதி செய் யப்படுகிறது. இறால் தவிர ரூ.21,246 கோடி மதிப்பிலான மீன்கள் உள்ளிட்ட 6 விதமான இதர கடலுணவுப் பொருட்கள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.