புதுதில்லி, மார்ச் 25 - “8 ஆண்டுகளாக பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி, இன்று ஒரு சினிமா இயக்குநர் பாதங்களில் தஞ்சம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்..” என்று தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார். கடந்த மார்ச் 11 அன்று வெளி யான ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற இந்திப் படத்தை, பாஜக-வினரும் சங்-பரிவார் அமைப்புகளும் தீவிர மாக கொண்டாடி வருகின்றனர். பிரத மர் நரேந்திர மோடி படக்குழு வினரை நேரில் அழைத்துப் பாராட்டி யதுடன், இந்த படத்திற்கு எதிராக இழிவான சதி நடப்பதாக ஆவேசப் பட்டார். பாஜகவினர் இந்தப் படத்தை இப் போது வரை ஆங்காங்கே தியேட்டர் களில் மக்களுக்கு இலவசமாக திரை யிட்டு வருகின்றனர். பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், திரிபுரா, கோவா, ஹரியானா, குஜராத், உத்தர்கண்ட் மாநிலங்களில் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்திற்கு முழு வரிவிலக்கும் தரப்பட்டுள்ளது.
ஆனால், ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிராக பொய்யையும், வெறுப்பை யும் பரப்புகிறது என்று காங்கிரஸ், இடதுசாரிகள், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்ட னத்தைத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாள ருமான கெஜ்ரிவாலும், தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். “பாஜக ஆளும் மாநிலங்களைப் போல, தில்லியிலும் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்திற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்” என்று பாஜக எம்எல்ஏ-க்கள் சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு பதிலளித்து கெஜ்ரிவால் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்திற்கு தில்லியில் பாஜக-வினர் வரிவிலக்கு கோரி இருக்கிறார்கள். எதற்காக இப்படி கேட்க வேண்டும்? இந்த படத்தை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதில் அவர்கள் மிகுந்த ஆர்வ மாக இருந்தால், இயக்குநர் விவேக் அக்னிகோத்ரியிடம் பேசி படத்தை யூடியூப்பில் வெளியிட்டு விடலாம். அங்கு வெளியிடுவதற்கு எந்த வரியும் கிடையாது என்ப தோடு, ஒரே நாளில் அனைவரும் படத்தை பார்த்து விடுவார்கள்.
மாறாக, நாடு முழுவதும் பாஜக கட்சியினர் இப்படத்திற்காக தெருத்தெருவாக சினிமா போஸ்டர் ஒட்டுகிறார்கள். பாஜக-வினர் அரசியலுக்கு வந்தது சினிமாவுக்கு போஸ்டர் ஒட்டத்தானா? வீட்டிற்கு போனால் அவர்கள் தங்களின் பிள் ளைகளுக்கு என்ன சொல்வார்கள்? இந்த நாட்டை எட்டு ஆண்டு கள் ஆண்ட பிறகும் பிரதமர் மோடி, இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி யின் பாதங்களில் தஞ்சம் அடை வது, அவர் தனது பதவிக்காலத்தில் எதையுமே செய்யவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தை வைத்து, காஷ்மீர் பண்டிட்கள் பெயரில் சிலர் கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டார்கள். பாஜக தொண்டர்களுக்கு கிடைத்தது போஸ்டர் ஒட்டும் வேலைதான். பிரதமர் மோடி வேலைகளைக் கொடுத்தார் என்று பாஜக-வினர் கூறுகிறார்கள். சர்வாதிகாரி ஹிட்லர் கூடத்தான் தனது அடியாட்களுக்கு வேலை கொடுத்தார். உண்மையில் இந்த கெஜ்ரிவால்தான் பாஜக-வினருக்கு வேலை கொடுக்கிறார். பாஜக-வினருக்கு தேவையான மருந்துகளை கெஜ்ரிவால்தான் தருகிறார். மோடி அல்ல. எனவே, பாஜக-வினர் கண்களை திறந்து கொள்ளுங்கள். பாஜக-வை விட்டு வெளியே வாருங்கள். ஆம் ஆத்மியில் இணையுங்கள். இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள் ளார்.