states

மேலும் 5 புலிகள் காப்பகங்கள் அமைக்க நடவடிக்கை

புதுதில்லி,ஜன.23- இந்த ஆண்டு இறுதிக்குள், மேலும் ஐந்து புலிகள் காப்பகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒன்றிய அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.  ஒன்றிய  அரசு, மாநில அரசுகள் புலிகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் புலிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 5 இடங்களில் புலிகள் காப்பக அந்தஸ்து வழங்கப்பட உள்ளது. அதன்படி, கர்நாடகா மாநிலம் எம்.எம். மலைப்பகுதி, சத்தீஸ்கர் மாநிலம் குரு காசிதாஸ் தேசிய பூங்கா,  ராஜஸ்தான் மாநிலம் ராம்கார்க்  விஸ்தாரி ஆகிய 3 இடங்களுக்கு ஏற்க னவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அருணாச்சலப் பிரதேச மாநி லத்தில் உள்ள திபங் வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் பீகார் மாநி லத்தில் உள்ள கைமூர் வனவிலங்கு கள் சரணாலயம் ஆகிய இரண்டு இடங்களில் புலிகள் காப்பகம் அமைப்பதற்கான முதல்கட்ட நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், “மூன்று இடங்கள் ஏற்கனவே ஒன்றிய  அரசின் ஒப்பு தலைப் பெற்றுள்ளதால், சம்பந்தப் பட்ட மாநிலங்கள் இப்போது இந்தப் பகுதிகளை புலிகள் காப்பகங்களாக முறையாக அறிவிக்க வேண்டும். மறுபுறம், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972-ன் கீழ் மாநிலங்களிட மிருந்து விரிவான முன்மொழிவு களைக் கோரி, தேசிய புலிகள் பாது காப்பு ஆணையம் இரண்டு இடங் களுக்கு கொள்கை ரீதியிலான ஒப்புத லைத் தெரிவித்தது.ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் நடைபெற வுள்ள உலகளாவிய புலிகள் உச்சி  மாநாட்டிற்கு முன், ஐந்து புதிய இடங்களும் முறையாக அறிவிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.  தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், அந்த முன்மொழிவை உரியக் காலத்திற்குப் பிறகு மாநி லத்திற்கு பரிந்துரைக்கிறது. இது வரை மொத்தம் உள்ள 51 புலிகள் காப்பகங்களும் சேர்த்து 73,765 சதுர கி.மீ. பரப்பளவில் இருக்கின்றன.