புதுதில்லி, நவ.23- நாடு முழுவதும் மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தைத் தனியாரி டம் தாரைவார்க்க வகைசெய்யும் மின்சாரத் திருத்தச் சட்டமுன் வடிவை எதிர்த்து நவம்பர் 23 புத னன்று தலைநகர் புதுதில்லியில் நாடாளுமன்ற வீதியில் மின்ஊழி யர்கள் மற்றும் பொறியாளர்கள் மாபெரும் பேரணி-ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு தேசிய மின்சார ஊழியர்கள்- பொறி யாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு அறைகூவல் விடுத்திருந்தது. மின்சாரத் திருத்தச் சட்டமுன் வடிவு மிகவும் ஜனநாயக விரோத மான முறையில் மக்களவையில் கடந்த மழைக்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப் பட்டது. இதன் விளைவாக நாடு முழு வதும் மின் ஊழியர்கள்-பொறி யாளர்கள் மத்தியில் கடும் கோபா வேசம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சட்ட முன்வடிவைத் திரும்பப்பெற வலியுறுத்தி, அனைத்து மாநிலங் களில் இருந்தும் வந்து குவிந்த பல்லாயிரக்கணக்கான மின் ஊழி யர்கள் மற்றும் பொறியாளர்கள் நாடாளுமன்ற வீதியில் போராட்டத் தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப் பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரசாந்தோ நந்தி சவுத்ரி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, சிஐ டியு பொதுச் செயலாளர் தபன்சென், சிஐடியு அகில இந்திய நிர்வாகிகள் ஸ்வதேஷ் தேவ்ராய், ஆர்.கருமலையான், தேசிய மின் சார கூட்டமைப்பின் அகில இந்திய தலைவர் இளமரம் கரீம் எம்.பி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) மாநில தலை வர் டி.ஜெய்சங்கர், மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெயந்தி, ஐக்கிய சங்க பொதுச் செயலாளர் எம்.சுப்பிரமணியன் உட்பட பலர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் நாடாளு மன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்சார சட்டத் திருத்த மசோதாவை எந்தவித திருத்தமுமின்றி ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்; அதையும் மீறி ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தால் உடனடியாக அன்றே தொடர் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஒன்றிய பாஜக அரசாங்கம் ஏற்கனவே தாதர் - நாகர்ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்தில் மின் துறையைத் தனி யாரிடம் அளித்துள்ளது. சண்டி கர் மற்றும் புதுச்சேரி யூனியன் பிர தேசங்களில் தனியார்மயத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டி ருக்கிறது. மின்ஊழியர்-பொறியாளர் பளின் உணர்வுகளுக்கு மதிப்பளி த்து ஒன்றிய அரசாங்கம் இச்சட்ட முன்வடிவைத் திரும்பப்பெறா விட்டால் நாடு தழுவிய அளவில் போராட்டம் தீவிரமாகும் என்றும் தலைவர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுதும் உள்ள மின்வாரிய ஊழி யர்கள். பொறியாளர்கள் என சுமார் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.