வங்கிக் கணக்கு துவங்க ஆதார் கட்டாயமில்லை
வங்கிக் கணக்கு துவங்க ஆதார் தகவல்களை சமர்ப்பிக்க வங்கி கள் தமது வாடிக்கையாளர்க ளை வற்புறுத்தக் கூடாது என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கிக் கணக்கு துவங்க ஆதார் அட்டை வேண்டும் என கணக்கு துவங்கு வதை யெஸ் வங்கி தாமதப்படுத்தியதாக மைக்ரோ ஃபைப்ர்ஸ் நிறுவனம் தரப்பில் 2018 இல் வழக்கு ஒன்று தொட ரப்பட்டது. அவ்வழக்கில் வங்கிக் கணக்கு துவங்க ஆதார் அவசியம் இல்லை என 2018 ஆம் ஆண்டே உச்சநீதிமன்றம் தெரி வித்துள்ளது. இதனையடுத்து அந்த வங்கியும் ஆதார் இல்லாமல் கணக்கு துவங்க ஒப்புக் கொண்டது. ஆனால் 2019 ஆம் ஆண்டு ஆதாரை கொடுத்தால் தான் வங்கிக் கணக்கு துவங்க முடியும் என அதே வங்கி வாடிக்கையாளர் ஒருவருக்கு கணக்கு துவங்காமல் தாமதப்படுத்தியுள்ளது. இதனால் தனக்கு நட்டம் ஏற்பட்டதாக அவர் மும்பை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, வங்கிகள் வங்கிக் கணக்கு துவங்க ஆதார் தகவல்களை சமர்ப்பிக்க வாடிக்கையாளர்களை வற்புறுத்தக் கூடாது என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மனுதாரருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க யெஸ் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.