ஆதார் அட்டையை ஆவணமாக பரிசீலிக்க வேண்டும்
தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை
வாக்காளர் பட்டியல் திருத் தத்துக்கு எதிராக காங்கி ரஸ், இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த மனு திங்களன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதி பதிகள் சூர்யகாந்த், ஜாய்மாலியா பக்சி அமர்வு இருதரப்பு வாதத்திற்கு பின்பு, “முறைகேடு கண்டறியப்பட்டால் குறிப் பிட்ட நபர் மீது ஆணையம் நடவடிக்கை எடுக்கலாம். உலகில் எந்த ஆவணங்க ளையும் மோசடியாக தயாரிக்கலாம். மொத்தமாக பெயர்களை நீக்குவதை விட மொத்தமாக பெயர்களை சேர்க்க வேண்டும். குறிப்பாக பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு ஆதார், வாக்கா ளர் அடையாள அட்டையை ஆவணமாக பரிசீலிக்க வேண்டும்” என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதி கள் அறிவுறுத்தி உள்ளனர்.