அசாமில் சிதறும் பாஜக? மாநிலத்தின் முக்கிய தலைவர், 17 நிர்வாகிகள், நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கட்சியை விட்டு விலகினர்
கவுகாத்தி வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் பாஜக ஆட்சி நடைபெற்று வரு கிறது. முதலமைச்சராக ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளார். அசாம் மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் முக் கிய பாஜக தலைவர்களில் ஒருவ ரான ராஜென் கோஹைன் கட்சியை விட்டு விலகுவதாக அக்.9 அன்று அறிவித்தார். 4 முறை எம்.பி.யும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ராஜென் கோஹைனுடன் பராக் பள்ளத்தாக் தொகுதியின் முன் னாள் எம்எல்ஏ கார்த்திக் சென் சின்ஹா உட்பட 17 முக்கிய பாஜக நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக் கான தொண்டர்கள் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தனர். கோஹைன் இன்னும் வேறு எந்த கட்சியிலும் சேரவில்லை என்றா லும், மற்ற பாஜக உள்ளூர் தலை வர்கள், நூற்றுக்கணக்கான தொண் டர்கள் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியில் அக்.15 முதல் இணைந்து வருகின்றனர். பழங்குடி மக்களுக்கு துரோகம் பாஜகவில் இருந்து விலகியது தொடர்பாக ராஜென் கோஹைன் கூறுகையில்,”மற்ற கட்சிகளிலி ருந்து அழைத்து வரப்பட்ட தலை வர்களால் அசாம் மாநில பாஜக செயல்படுகிறது. மற்ற கட்சிகளிலி ருந்து வருபவர்களுக்கே பொறுப்பு, பதவி எல்லாம் கிடைக்கிறது. அடி மட்டத் தொண்டர்கள் மற்றும் கட்சி யில் உள்ள தலைவர்களைப் புறக்க ணிக்கும்போது, பாஜகவில் தொட ர்ந்து இருப்பதால் ஒரு பயனும் இல்லை. நான் அசாம் பாஜகவின் முக்கிய தலைவராக இருந்தும், தில்லியில் (பாஜக மேலிடம்) யாரும் எங்களுடன் பேசுவதில்லை. கட்சி பிரச்சனை தொடர்பாக பேச முயற்சித்தேன். ஆனால் அமித் ஷா போன்ற தலைவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை. தில்லி யில் பாஜகவின் மூத்த தலைவர் களுடனான சந்திப்பு கூட அனுமதி மறுக்கப்படுகிறது. குறிப்பாக அசா மில் பாஜக ஆட்சி செய்தாலும் பழங்குடி மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது” என அவர் குற்றம்சாட்டினார். ஹிமந்தா பிஸ்வா மற்ற கட்சிகளிலிருந்து அழை த்து வரப்பட்ட தலைவர்களால் அசாம் மாநில பாஜக செயல்படு கிறது என ராஜென் கோஹைன் கூறி யது, முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாவைத் தான். 2015இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜக வுக்குத் தாவி, 2021இல் முதல மைச்சராகப் பதவியேற்றவர் ஹிமந்தா. மத்திய அசாமில் பாஜக காலியாகிறது 1999 முதல் 2014 வரை தொடர்ச்சி யாக 4 முறை நாகோன் மக்களவை தொகுதியில் இருந்து எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜென் கோஹைன் மோடி ஆட்சியில் 2016 முதல் 2019 வரை ரயில்வே இணையமைச்சராக பணியாற்றி னார். ராஜென் கோஹைன், பழங் குடி மற்றும் மத்திய அசாம் பகுதி களில் செல்வாக்கு உள்ள நபராக உள்ளார். ஜாகிரோடு, மோரிகான், லஹரிகாட், ரஹா, நாகோன்-படார் தவா, திங், ரூபாகிஹாட், சமகுரி உள்ளிட்ட 8 சட்டமன்ற தொகுதி களில் உள்ள பாஜக கட்சியின் நிர்வாகங்கள் ராஜென் கோஹை னின் முழுக்கட்டுப்பாட்டில் தான் உள்ளது. நிலைமை இப்படி உள்ள நிலையில், ராஜென் கோஹைன் கட்சியை விட்டு விலகியது பாஜக விற்கு பெரும் இழப்பாக கருதப்படு கிறது. கிட்டத்தட்ட மத்திய அசா மில் பாஜக கூடாரம் காலியாகும் சூழல் உருவாகியுள்ளது.
