states

img

சத்தீஸ்கருக்கு கேரள எம்பிக்களுடன் பிருந்தாகாரத் பயணம்

சத்தீஸ்கருக்கு கேரள எம்பிக்களுடன் பிருந்தாகாரத் பயணம்

கன்னியாஸ்திரிகள் கைது

மத மாற்றம் மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டில் கேரள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டதைத் தொ டர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத், இந்திய தேசிய மாதர் சம்மேளன பொதுச்செயலாளர் ஆனி ராஜா, இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) எம்.பி.,க்கள் ஆகியோர் சத்தீஸ்கர் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்தக் குழுவில் சிபிஎம் மக்களவைத் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநி லங்களவை உறுப்பினர்கள் ஏ.ஏ. ரஹீம், பி.பி.சுனீர் மற்றும் ஜோஸ் கே.மணி ஆகியோர் உள்ளனர். இந்தக் குழு செவ்வாயன்று மதியம் 12 மணிக்கு தில்லியை விட்டு புறப் பட்டது. அனுமதி மறுக்கும் காவல்துறை இதனிடையே, கைது செய்யப் பட்ட நான்காவது நாளாக கன்னி யாஸ்திரிகள் தேவாலய அதிகாரிக ளைத் தொடர்பு கொள்ளக் கூட காவல்துறை அதிகாரிகள் அனு மதிக்கவில்லை. கன்னியாஸ்திரி கள் மீது சத்தீஸ்கர் மத சுதந்திரச் சட்டத்தின் பிரிவு 4 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 143 ஆகியவற்றின் கீழ் மனித கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. இதில் ‘கட்டாய மதமாற்றம்’ என பிஎன்எஸ் பிரிவு 152 தேச  விரோத நடவடிக்கைகளுக்கா கவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கன்னியாஸ்திரிகள் மீது அதிக பட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய பிரிவு கள் சுமத்தப்பட்டுள்ளன. தற்போது காவலில் உள்ள கன்னியாஸ்திரிகள், ஜுலை 28 திங்களன்று துர்க் மாவட்ட நீதி மன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறு ஆரம்பத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால், முதல் தகவல் அறிக்கையில் சில கடுமை யான குற்றச்சாட்டுகள் கூடுதலாக குறிப்பிடப்பட்டதால், ஜாமீன் மனு பின்னர் தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.  அதன்படி செவ்வாயன்று பெற்றோரின் அனுமதியுடன் வீட்டு வேலைக்கு சிறுமிகளையும், உற வினரையும் அழைத்து வர வந்த கன்னியாஸ்திரிகளும், பஜ்ரங் தளத் தலைவர்கள் ரத்தன் யாதவ் மற்றும் ஜோதி சர்மா தலைமை யிலான குண்டர்களால் தாக்கப் பட்டனர். பஜ்ரங் தளம் குண்டர்கள் காவல்துறையினரை அழைத்து, அவர்கள் ‘மத மாற்றம்’ செய்ததா கக் குற்றம் சாட்டினர். ஆனால், 5 ஆண்டுகளுக்கு முன்பே தாங்கள் மதம் மாறியதாகவும், கன்னி யாஸ்திரிகள் அப்பாவிகள் எனவும் சிறுமிகளின் சகோதரி காவல் துறையிடம் தெரிவித்துள்ளார். ஜாமீன் மனு தள்ளுபடி துர்க் நீதிமன்றத்தில் செவ்வா யன்று தாக்கல் செய்யப்பட்ட கன்னி யாஸ்திரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நேரத்தில் இச்சம்பவம் குறித்து விவாதிக்க கேரள எம்பிக்கள் மக்க ளவையில் தாக்கல் செய்த நோட் டீஸை தள்ளுபடி செய்த அவைத் தலைவர் இப்பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுத்தார். இதற்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு வெளியே அவர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.