கர்நாடகாவில் கோர விபத்து மினி லாரி புகுந்து 9 பேர் பலி
கர்நாடக மாநிலம் ஹசன் மாவட் டத்தின் மொசலே ஹொசஹள்ளி கிராமத்தில் வெள்ளிக்கிழமை அன்று இரவு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. அப்பகுதியில் வந்து கொண்டு இருந்த மினி லாரி ஒன்று ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்து ஊர்வல கூட்டத்திற்குள் புகுந்தது. இந்த கோர விபத்தில் மினி லாரியின் சக்கரத்துக்கு அடியில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். பலத்த காயம டைந்த 24 பேர் ஹசன் மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். சனிக் கிழமை அன்று காலை நிலவரப்படி மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்த டுத்து உயிரிழக்க, உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
