புதுதில்லி, பிப்.26- நடப்பு 2021-22 நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (GDP) மதிப்பீட்டை, ‘இந்தியா ரேட் டிங்ஸ்’ நிறுவனம் 8.6 சதவிகிதமாக குறைத்துள்ளது. முன்னதாக, ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ நிறுவனம், நடப்பு 2021-22 நிதி யாண்டில் இந்தியப் பொருளாதாரத் தின் வளா்ச்சி 9.2 சதவிகிதமாக இருக் கும் என கணித்திருந்தது. இதனிடையே, தேசிய புள்ளியியல் அலுவலக மதிப்பீட்டின்படி உண்மை யான மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 147.2 லட்சம் கோடி என்ற அளவிலேயே இருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் இதனை மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் கணக்கிடும்போது வளா்ச்சி விகி தம் 8.6 சதவிகிதமாகவே இருக்கும் என்று ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ கணித் துள்ளது. முந்தைய மதிப்பீட்டிலிருந்து 6 புள்ளிகளை ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ குறைத்துள்ளது.