states

செப்டம்பர் காலாண்டில் ரூ.60 ஆயிரம் கோடி லாபமீட்டின - பொதுத்துறை வங்கிகள் சாதனை!

ரிலையன்ஸை பின்னுக்குத் தள்ளிய எஸ்பிஐ வங்கி

‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’, 2022-23 நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் ரூ. 14 ஆயிரத்து 752  கோடி ரூபாய் அளவிலான தொகையை  ஒருங்கிணைந்த நிகர லாபமாகப் பெற்றதன் மூலம் நாட்டில் அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக உயர்ந்துள்ளது. இதுவரை முதல் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ. 13 ஆயி ரத்து 656 கோடி நிகர லாபத்துடன் 2-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது.

புதுதில்லி, நவ.8- 2022-23 நிதியாண்டின் இரண்டாவது (ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3 மாதங்களில்) காலாண்டில், இந்திய வங்கிகள் முன்னெப்போதும் இல்லாத  வகையில் சுமார் ரூ. 60 ஆயிரம் கோடி அள விற்கு லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளன. கடந்த 2021-22 நிதியாண்டின் இதே 3 மாத காலத்தில் இந்திய வங்கிகளின் நிகர லாபம் ரூ. 37 ஆயிரத்து 567 கோடி ரூபாயாக இருந்த நிலையில், அது நடப்பு நிதியாண்டின் 3 மாத காலத்தில் 59 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் வங்கி பங்கு முதலீட்டா ளர்கள் அதிகப்படியான லாபத்தைப்  பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர். நாட் டின் முக்கிய வங்கிகள் சனிக்கிழமை தனது காலாண்டு முடிவுகளை அறிவித்த பிறகு  வங்கி தேசிய பங்குச் சந்தைக் குறியீடான ‘நிப்டி’ திங்கட்கிழமையன்று தனது வர்த்த கத்தில் 41 ஆயிரத்து 779 புள்ளிகளைத் தொட்டு, அதன் முந்தைய வரலாற்று உச்ச மான 41 ஆயிரத்து 840-ஐ நெருங்கியது.  பொதுத்துறை வங்கிகள் ஈட்டிய லாபத்தில் 50 சதவிகிதத்திற்கும் அதிக மாக ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ வங்கி  மட்டும் பெற்றுள்ளது. அத்துடன், முன் னெப்போதும் இல்லாத வகையில், அதிக பட்ச காலாண்டு லாபமாக ரூ. 13 ஆயிரத்து 256 கோடியை எட்டி சாதனை படைத்துள்  ளது. முந்தைய 2021-22 நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில், ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ ரூ. 7 ஆயிரத்து 627 கோடி யை நிகர லாபமாக ஈட்டியிருந்த நிலை யில், அதைக்காட்டிலும் நடப்பு நிதியாண்  டின் செப்டம்பர் காலாண்டில் 74 சதவிகி தம் லாபம் அதிகரித்துள்ளது.

இதேபோல மற்றொரு முக்கிய பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியின் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் ரூ. 1,225 கோடியாக அதி கரித்துள்ளது. 2021-22 நிதியாண்டின் செப்  டம்பர் காலாண்டின் நிகர லாபமான ரூ.  1,089 கோடியோடு ஒப்பிடுகையில், 13 சத விகிதம் அதிகம். அரசுக்குச் சொந்தமான யூகோ வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபமும் 2 மடங்கிற்கும் மேலாக  அதிகரித்துள்ளது. 2021-22 நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் யூகோ வங்கி யின் நிகரலாபம் ரூ. 205 கோடியே 39 லட்ச மாக இருந்தது. இது நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் ரூ. 504 கோடியே  52 லட்சமாக உயர்ந்துள்ளது.  இவ்வாறு 2022-23 நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் பொதுத்துறை வங்கிகள் ரூ. 60 ஆயிரம் கோடி லாபமீட்டி யுள்ள நிலையில், இதே காலத்தில் தனி யார் வங்கிகள் ஒட்டுமொத்தமாக ரூ. 33 ஆயிரத்து 165 கோடி லாபத்தைப் பதிவு  செய்துள்ளன. இது முந்தைய நிதியாண் டின் 2-ஆவது காலாண்டில் ரூ. 19 ஆயி ரத்து 868 கோடியாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் அந்த லாபம் 67 சத விகிதம் அதிகரித்துள்ளது.