தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக 4 வழக்கறிஞர்கள்
தெலுங்கானா மாநிலத்தின் உயர் நீதிமன்றமாக இருப்பது ஹைதராபாத் உயர்நீதி மன்றம் ஆகும். இந்த நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக 4 வழக்கறிஞர்கள் வியாழனன்று பதவியேற்றுக் கொண்ட னர். உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் கவுஸ் மீரா மொஹியுதீன், சுத்தாலா சலபதி ராவ், வகிதி ராமகிருஷ்ணா ரெட்டி, காடி பிரவீன் குமார் ஆகிய 4 பேருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கூடுதல் நீதிபதிகள் 2 வருட காலத்திற்கு நியமிக்கப் படுகிறார்கள். பின்னர் நீதிபதிகளாக அல்லது நிரந்தர நீதிபதிகள் என்ற பதவி உயர்வு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.