சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 4 ரசாயனப் பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை இந்தியா விதித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தாவி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கிய 9 பேரை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சியின் நிறுவனரான லாலு பிரசாத் (77) அக்கட்சியின் தேசியத் தலைவராக செவ்வாய்க்கிழமை மீண்டும் தோ்வு செய்யப்பட்டார். தலைவா் பதவிக்கான தோ்தலில் லாலுவைத் தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை. அகாலி தள தலைவரும், முன்னாள் அமைச்ச ருமான விக்ரம் சிங் மஜிதியா வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை நடத்தினர். இந்த விவகாரம் குறித்து ஊழல் தடுப்புப் பிரிவினர் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தரவில்லை. சோதனை ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்து தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று மஜிதியாவின் மனைவியும் அகாலி தள எம்எல்ஏவுமான கணீவ் கௌர் குற்றம் சாட்டியுள்ளார்.