2 கோடிப் பேர் வாக்களிக்கும் உரிமையை இழக்கும் அபாயம்
இந்தியா கூட்டணி எச்சரிக்கை
2 கோடிப் பேர் வாக்களிக்கும் உரிமையை இழக்கும் அபாயம் இந்தியா கூட்டணி எச்சரிக்கை பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத் தத்தால் 2 கோடிப் பேர் வாக்க ளிக்கும் உரிமையை இழப்பார்கள் என இந்தியா கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது. பீகாரில் நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்கா ளர் பட்டியலை திருத்தும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது. இந்த திருத்தம் முறையானதல்ல என எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணை யத்தில் முறையிட்டுள்ளன. குறிப்பாக பீகாரில் உள்ள மோசமான வறுமையின் காரணமாக அம்மாநில மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதத்துக் கும் அதிகமானோர் வெளிமாநிலங்களு க்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். இந்த நடவடிக்கை காரணமாக சுமார் 2 கோடி புலம்பெயர்ந்த மக்கள் வாக்க ளிக்கும் உரிமையை இழந்து விடுவார் கள் என இந்தியா கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது.