செயலற்ற நிலையில் 13.04 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் ]
ஏழை எளிய மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைக்கும் என்றும், எளி தாக வங்கிக் கணக்குகள் தொடங்க முடியும் என்றும் கூறி ஒன்றிய மோடி அரசு “ஜன் தன் யோஜனா” என்ற திட்டத்தை 2014 ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இந்த திட்டம் தொடர்பாக நாடாளு மன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய நிதி இணைய மைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வ மாக அளித்த பதிலில்,“2025 ஜூலை 31ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 56.04 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 23%, அதாவது 13.04 கோடி கணக்குகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் செய லற்ற நிலையில் உள்ளன. இந்தக் கணக்குகளை மீண்டும் செயல்பாட்டு க்குக் கொண்டுவர அரசு பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலம் வாரியாக உத்தரப்பிரதேசம் 2.75 கோடி செயலற்ற கணக்குகளுடன் முத லிடத்தில் உள்ளன. அடுத்து, பீகாரில் 1.39 கோடி கணக்குகளும், மத்தியப்பிர தேசத்தில் 1.07 கோடி கணக்குகளும் செய லற்ற நிலையில் உள்ளன” என அதில் கூறப்பட்டுள்ளது.