states

ஜம்மு-காஷ்மீரில்  மீண்டும் மேகவெடிப்பு ரம்பனில் 11 பேர் பலி

ஜம்மு-காஷ்மீரில்  மீண்டும் மேகவெடிப்பு ரம்பனில் 11 பேர் பலி

ஜம்மு-காஷ்மீர் கடந்த 2 வார காலமாக கனமழையால் உருக்கு லைந்து போயுள்ளது. குறிப்பாக மாநிலம் முழுவதும் 4க்கும் மேற்பட்ட மேகவெடிப்பு சம்பவங்கள் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், ரம்பன் மாவட்டத்தின் ராஜ்கர் தாலுகாவில் மேகவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த மேகவெடிப்பு மழையால் 11 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காணாமல் போயுள்ளனர். பாதிக்கப் பட்ட பகுதியில்மீட்புக் குழுக்கள் காணா மல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே ஜம்மு-காஷ்மீர் கனமழை யால் இயல்பு நிலையை இழந்துள்ள நிலையில், பூஞ்ச், கிஷ்த்வார், ஜம்மு, ரம்பன், உதம்பூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்ச ரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.