states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து

https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury

10 லட்சம் காலியிடம்! நிரப்புங்கள் முதலில்...

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் தின ஊதியம் ரூ. 337 கொடுக்க வேண்டும் என இருந்தாலும் 207 ரூபாய்தான் தரப்படுகிறது. எனினும் கூட வரலாறு காணாத அளவுக்கு மே மாதம் 3.1 கோடி குடும்பங்கள் வேலை கேட்டு பதிவு செய்துள்ளன. 43 சதவீதம் உயர்வு! 

  1.      விவசாயம் சாராத கிராமப்புற ஊதியம் வீழ்ச்சி!
  2.      இரு சக்கர வாகனங்கள் விற்பனை 21 சதவீதம் சரிவு!
  3.      விவசாய இடுபொருட்கள் விலை 11 சதவீதம் உயர்வு!
  4.      குறைந்தபட்ச ஆதார விலை 5.8 சதவீதம் மட்டுமே அதிகரிப்பு!
  5.      கிராமப்புற சந்தை விற்பனை 5.8 சதவீதம் சரிவு!

இது மட்டுமல்ல, மிகப்பெரிய அளவுக்கு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட 40.8 லட்சம் ஒன்றிய அரசு பணியிடங்களில் 8.9 லட்சம் அதாவது 21.7 சதவீதம்  காலியாக உள்ளன. ராணுவத்தில் உள்ள காலியிடங்களை சேர்க்காமல், ஒன்றிய அரசின் அனைத்து பிரிவுகளிலுமாக 10 லட்சம் பணிகள் நிரப்பப்படாமல் உள்ளன.

இதுதான் இன்றைய இந்தியா!

இதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு ‘அக்னி பாதை’  என திசை திருப்புவது அப்பட்டமான மோசடி வேலை!