states

img

தலைவராக ஏ.ஏ.ரஹீம், பொதுச் செயலாளராக ஹிமக்னராஜ் பட்டாச்சார்யா தேர்வு

டியாகோ மரடோனா நகர் (சால்ட் லேக், கொல்கத்தா), மே 16 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 11ஆவது அகில இந்திய மாநாடு ஞாயிறன்று நிறைவடைந்தது. சங்கத்தின் அகில இந்திய தலைவராக ஏ.ஏ.ரஹீம், பொதுச் செயலாளராக ஹிமக்னராஜ் பட்டாச்சார்யா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கொல்கத்தா நகரில் 27 ஆண்டு களுக்குப் பிறகு, இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு நடை பெற்றது. மே 12 ஆம் தேதி பொது மாநாட்டை சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும், 13 ஆம் தேதி பிரதிநிதிகள் மாநாட்டை பிரபல ஊடகவியலாளர் சசி குமாரும் துவக்கி வைத்தனர்.  பிரதிநிதிகள் மாநாட்டிற்கு ஏ.ஏ.ரஹீம்,  எஸ்.பாலா, பாலஸ் பவுமிக், மீனாட்சி  முகர்ஜி, சஞ்சய் பஸ்வான், குமுத்  தேவ்வர்மா ஆகியோர் தலைமையேற்றனர். மாநாட்டின்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள் நடை பெற்றன. சங்கத்தின் முன்னாள் தலைவர் களான சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, கேரள சபாநாய கர் எம்.பி.ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  ஞாயிறன்று (மே 15) நிறைவடைந்த மாநாட்டில் அகில இந்திய தலைவராக ஏ.ஏ.ரஹீம், பொதுச் செயலாளராக ஹிமக்னராஜ் பட்டாச்சார்யா, பொருளாள ராக சஞ்சீவ் குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்க பட்டனர். துணைத் தலைவர்களாக வி.வசீப், துருவ் ஜோதி சகா, பாலேஸ் பவுமிக் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். இணை செய லாளர்களாக வி.கே.சனோஜ், மீனாட்சி முகர்ஜி, நபருன் தேவ், ஜதின் மொகந்தி, ஜெகதீஷ் சிங் ஜக்கி, குமுத் தேவ் வர்மா, ஜெய்க் சி தாமஸ், வெங்கடேஷ், பர்சானா, பிகாஷ் ஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

பொருளாளராக சஞ்சீவ் குமார் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர் பொறுப்பில் ஒரு இடம் தமிழகத்தில் வாலிபர் சங்க  மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப் படுபவருக்கு ஒதுக்கப்பட்டு, காலியாக விடப்பட்டுள்ளது. இணைச் செயலாளர் பொறுப்பில் ஒரு இடம், ஆந்திரப்பிரதேச மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப் படுபவருக்காக காலியாக விடப்பட்டுள்ளது.  மொத்தம் 77 பேர் கொண்ட வாலிபர் சங்க மத்திய நிர்வாக குழுவில், சங்கத்தின் மாநில மாநாடு இன்னும் நடைபெறாத தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கான மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான இடங்கள் காலியாக விடப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநில மாநாடு நடந்து முடிந்த பின்னர், இரண்டு பெண்கள் உள்பட ஆறு இடங்களுக்கான மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

;