states

தீக்கதிர் விரைவு செய்திகள்

நூல் விலை உயர்வு: நிர்மலாவை சந்திக்கும் தமிழக எம்.பி.க்கள்

நூல் விலையை குறைக்கக் கோரி திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் விசைத்தறி தொழில் நிறுவனங்கள் கடந்த 2 நாட்களாக வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். இந்த போராட்டத்தால் சுமார் 500 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இந்நிலை யில் பருத்தி, நூல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி, திமுக எம்.பி. கனிமொழி தலைமை யில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதனன்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரை சந்தித்துப் பேச்சு நடத்துகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்!

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு வரும் மே 21-ஆம் தேதி அன்று திட்டமிட்டபடி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வின்போது காலை 8.30 மணிக்கே தேர்வர்கள் வர வேண்டும். 9 மணிக்கு பின் தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று மேலும் கூறியுள்ள பாலச்சந்திரன், குரூப் 2 தேர்வுக்கு மொத்தம் 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்கூட்டியே தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

தென்மேற்கு பருவமழைக் காலம் அந்தமான் நிகோபார் தீவுகளில் முன்கூட்டியே திங்களன்று தொடங்கி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department - IMD) அறிவித்துள்ளது. “தென்மேற்கு பருவமழையானது இன்று (மே 16-ஆம் தேதி) தெற்கு வங்கக்கடல், அந்தமான் கடல், அந்தமான் நிகோபார் தீவுகளில் தொடங்கிவிட்டது. இது மேலும் வலுப்பெற்று, ஒட்டுமொத்த அந்தமான் நிக்கோபார் பகுதி, வங்கக்கடலின் கிழக்கு - மத்திய பகுதிகளிலும் அடுத்த இரண்டு, மூன்று தினங்களில் உருவாக சாதகமான சூழல் நிலவுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில், குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், தேனி ஆகிய தென்மாவட்டங்களில் கூடுதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கோதுமை ஏற்றுமதிக்கு தடை: வணிகர்கள் கடையடைப்பு

கோதுமை ஏற்றுமதி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோதுமை, பருப்பு வகைகள், எண்ணெய் வணிகர்களின் கூட்டமைப்பான ‘மத்தியப்பிரதேசம் சகால் அனாஜ் தல்ஹான் வியாபாரி மகாசங் சமிதி’ என்ற அமைப்பு, செவ்வாயன்று 270 விவசாயப் பொருள் சந்தைகளில் வணிகத்தை மூடி போராட்டம் நடத்தியுள்ளது. புதனன்றும் இந்தப் போராட்டத்தைத் தொடர்கிறது. “விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிக விலைக்கு கோதுமையை நாங்கள் வாங்கியுள்ள நிலையில், ஒன்றிய அரசு விதித்த தடையால் வர்த்தகர்களின் ஏற்றுமதி ஒப்பந்தங்கள் தற்போது ஆபத்தில் உள்ளன” என்று மகாசங் தலைவர் கோபால் தாஸ் அகர்வால் வேதனை தெரிவித்துள்ளார்.

வன்முறைக்கு காஷ்மீர் பைல்ஸ் திரைப்படமே காரணம்!

பாஜக ஆதரவு பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி அண்மையில் இயக்கிய ‘தி  காஷ்மீர் பைல்ஸ்’ என்ற திரைப்படம், காஷ்மீரில் 1990-களில் நடந்த படுகொலை விவ காரங்களை மீண்டும் கிளறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பண்டிட் சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகள் தற்போது அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிகழ்ந்துவரும் வன்முறைகளுக்கு ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம்தான் காரணம் என முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பான சூழலையே இது வரை நாங்கள் உருவாக்கி வைத்திருந்தோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விமான எரிபொருள் விலை 5.3 சதவிகிதம் அதிகரிப்பு!

விமான எரிபொருள் விலை கடந்த மார்ச் 16-ஆம் தேதி ஒரு கிலோ லிட்டருக்கு 18 சதவிகிதம்- அதா வது ரூ. 17 ஆயிரத்து 135 ரூபாய் 63 காசுகள் உயர்த்தப்பட்டது. ஏப்ரல் 1-ஆம் தேதி 2 சதவிகித மும், 16-ஆம் தேதி 0.2 சதவிகிதமும், மே 1-ஆம் தேதி 3.2 சதவிகிதமும் உயர்த்தப்பட்டது. இந்நிலை யில், திங்களன்றும் 5.3 சதவிகிதம் அளவிற்கு விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது தில்லியில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் ரூ. 1 லட்சத்து 23 ஆயிரத்து 39 ரூபாய்  71 காசுகள் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதுவே சென்னையில் ரூ. 1 லட்சத்து 27 ஆயிரத்து  286 ரூபாய் 13 காசுகளாக அதிகரித்துள்ளது.

சிபிஐ ரெய்டு நடக்கும் நேரம் சுவாரஸ்யமானது...

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய சென்னை, மும்பை, தில்லி என 7 நகரங்க ளில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாயன்று சோதனை நடத்தினர். 2010 முதல் 2014 வரையிலான 260 சீன நாட்டவர்களுக்கு சட்டவிரோதமாக விசா பெற்றுத்தருவதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் பெற்றார் என்று புதிய வழக்கு ஒன்றையும் அவர்கள் பதிவு செய்தனர். இந்நிலையில், “இந்த தேடுதல் நடத்தப்படும் நேரம் சுவாரஸ்யமானது என்பதை சுட்டிக்காட்டுகிறேன்” என்று கார்த்தி சிதம்பரத்தின் தந்தையும், முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் காலியாகும் மாநிலங்களவை இடத்திற்கு ப. சிதம்பரம் நிறுத்தப்படலாம் என்று ஊட கங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இதனையே ‘சுவாரஸ்யமான நேரம்’ என்று ப. சிதம்பரம் குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அசைவம் சாப்பிடும் ஆண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அசைவ உணவு சாப்பிட்டவர்களை காட்டிலும் தற்போது நாட்டில் அசைவ உணவு சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தேசிய குடும்ப நல சுகா தார ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 15 முதல்  49 வயது வரை உள்ளவர்கள் அதிகளவில் அசைவ உணவு சாப்பிடுகிறார்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், மீன், சிக்கன், மட்டன் போன்ற உணவுகளை நாள்தோறும் அல்லது வாரம்தோறும் சாப்பிடும் ஆண்கள் 83.4 சதவிகிதமாகவும், பெண்கள் 70.6 சதவிகிதமாகவும் அதி கரித்துள்ளனர். கடந்த 2015-16 ஆய்வின்படி, அசைவ உணவு சாப்பிடும் ஆண்கள் 78.4 சதவிகி தமாகவும், பெண்கள் 70 சதவிகிதமாகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞானவாபி மசூதியில் இருப்பது செயற்கை நீரூற்று!

வாரணாசி ஞானவாபி மசூதிக்குள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக பாஜக-வினர் கிளப்பி விட்டுள்ள நிலையில், ஞானவாபி மசூதிக்குள் உள்ளது சிவலிங்கம் அல்ல! என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி தெரி வித்துள்ளார். “ஞானவாபி மசூதிக்குள் உள்ளது செயற்கை நீரூற்று அமைப்பு. அது சிவலிங்கம் அல்ல. அனைத்து மசூதியிலும் செயற்கை நீரூற்று அமைப்பு இருப்பதுதான்” என்று கூறியுள்ள ஒவைசி, “நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள கமிஷன் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறாதது ஏன்?” என்று கேட்டிருப்பதுடன், “அந்த இடத்திற்கு சீல் வைப்பது 1991 சட்டத்தின்படி விதிமீறல்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.


சோமாலியாவின் ஜனாதிபதியாக ஹசன் ஷேக் முகமது தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்ய நடந்த இரண்டு சுற்றுகளிலும் முடிவை எட்ட முடியவில்லை. மூன்றாவது சுற்றில் ஷேக் முகமது வெற்றி பெற்றார். தற்போதைய ஜனாதிபதியான முகமது பர்மாஜோ தோல்வியடைந்துள்ளார். தான் தோற்றுவிட்டதாக அறிவித்துள்ள அவர், ஷேக் முகமதுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு முதல் 2017 வரையில் ஷேக் முகமது ஜனாதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான எஸ்டோனியாவில் அமெரிக்கா தலைமையிலான ராணுவக்கூட்டணி நேட்டோவின் போர்ப்பயிற்சிகள் நடைபெறுகின்றன. இதில் அமெரிக்கா, ஸ்வீடன், பின்லாந்து உள்ளிட்ட 14 நாடுகள் கலந்து கொள்கின்றன. எஸ்டோனியாவில் இதுவரையில் இவ்வளவு பெரிய ராணுவப் பயிற்சி நடைபெற்றதில்லை. சுமார் 15 ஆயிரம் ராணுவ வீரர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொலம்பியாவின் இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான பாலினோ ரியாஸ்கோஸ் மீது கொலை முயற்சி நடந்துள்ளது. தனது துணைவர் மற்றும் குழந்தைகளை உறவினர் ஒருவர் வீட்டிலிருந்து அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தபோதுதான் இது நடந்தது. மார்ச் மாதம் நடை பெற்ற தேர்தலில் நாடாளுமன்றத்தின் செனட் அவை உறுப்பின ராக ரியாஸ்கோஸ் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆளும் கூட்டணி யில் ஒரு அங்கமாக இவரது தலைமையில் இயங்கும் ஆப்பிரிக்க கொலம்பிய ஜனநாயகக் கூட்டணி இடம் பெற்றிருக்கிறது.




 

;