states

காவியும் ஒரு கைத்தடிதான்!

எந்த வண்ணம் புனிதமானது?
எந்த வண்ணம் ஆபாசமானது ?
எந்த வண்ணம் யாரின் காப்புரிமை ?

பச்சையாகப் பேசினான்
நீலப்படம் பார்த்தான்
மஞ்சள் புத்தகம் வாசித்தான்
காவியாக வைதான் 
ஆபாசத்தின் நிறமெது ?

காவி துறவின் வண்ணம்
என்பதெல்லாம் பழங்கதை
காவி அடையாளத்துடந்தானே
மதவன்முறையில் சங்கிகள்!

சங்கிகள் காவி அணிந்து
பொய் பேசலாம் 
வன்புணர்வு செய்யலாம்
கொலை செய்யலாம்
கொள்ளையடிக்கலாம்
ஏமாற்றலாம்
கலவரம் செய்யலாம்
அப்போதெல்லம்
கெடாத புனிதம் 
ஓர் நடிகை அணிந்தால்
கெட்டுவிடுமோ ?

 “ நான் இனி காவி 
அணிவித்து திருநீறு பூசி
அம்பேத்கரை அவமதிக்க மாட்டேன்” என நீதிமன்றத்தில் 
வாக்குறுதி கொடுத்ததானே 
ஒருத்தன் பொருளென்ன ?
காவி அவமதிப்பின் 
நிறம் என்பதா ?

சங்கிகளுக்கு எதன் மீதும் 
எந்த மரியாதையும் கிடையாது
கலவரத்துக்கும் வெறுப்பு அரசிய
லுக்கும்
காவியும் ஒரு கைத்தடிதான்.
வேறென்ன சொல்ல…
சுபொஅ.