states

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு எப்போது?

சென்னை,ஆக.4- சென்னை அருகே வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் இடம் தேர்வு  செய்யப்பட்டு நவீன வசதிகளுடன் பிரம்மாண்ட  பேருந்து நிலையம் ரூ.393.74 கோடியில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. பணி கள் மெதுவாக நடந்து வந்ததால் விரைந்து முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டார். ஆனாலும், பல்வேறு பணிகள் முடிவடை யாமல் உள்ளதால் பேருந்து நிலையத்தை திறக்க மேலும் தாமதாகும் என்று கூறப்படு கிறது. இதைத்தொடர்ந்து பேருந்து நிலையத் தில் கட்டுமான பணிகள் முடிந்து ஒரு பகுதியை  மட்டும் முதலில் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் திட்டமிட்டு இருப்ப தாக கூறப்படுகிறது. முதல்கட்டமாக நெல்லைக்கு பேருந்துகள் இயக்கப்படும். அடுத்து மதுரைக்கும்,  விழுப்புரத் திற்கும் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.