states

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வெற்றி பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு

சென்னை, மே 17- நூறுநாள் வேலை திட்டத்தில் நடைபெறும் கடும் அத்துமீறல்களை தடுக்கக் கோரி செவ்வா யன்று (மே 17) சென்னையில் மாற்றுத்திறனாளி கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இயக்குநருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. . நூறுநாள் வேலைதிட்டத்தில் ஒன்றிய அரசின் உத்தரவுப்படி நீலநிற பணி அட்டை வழங்க வேண்  டும். அதில், சட்டத்திற்கு புறம்பாக ஊராட்சித் தலைவர் கையெழுத்திடுவதை தடுக்க வேண்டும். வேலை கேட்கும் மனுவை ஊராட்சித் தலைவரி டம் தர நிர்பந்திக்கும் அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். ஆளும் கட்சியினரை தளப் பொறுப்பா ளர்களாக நியமித்து, பணி செய்யாமலே முழு  ஊதியம் பெறுவதை தடுக்க வேண்டும், அர சாணை 58 மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆணை யரின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

திறந்தவெளி சிறை

தமிழகம் முழுவதிலுமிருந்து போராட்டத் திற்கு பேருந்துகளில் வந்தவர்களை காவல்  துறையினர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனை  எதிர்த்து 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி கள் நடை மேடையிலேயே அமர்ந்து போராட்டத்  தில் ஈடுபட்டனர். காவல்துறையின் அடக்குமுறையை மீறி நூற்றுக் கணக்கானோர் சைதாப்பேட்டையில் உள்ள ஊரக வளர்ச்சி ஆணையர் அலுவலகம் அருகே குவிந்தனர். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநிலத் தலை வர் பா.ஜான்சிராணி, பொதுச் செயலாளர் எஸ். நம்புராஜன் தலைமையில் இப்போராட்டம் நடை பெற்றது.

பா.ஜான்சிராணி

ணி கூறியதாவது:  நூறுநாள் வேலை திட்டத்தில் வேலை அட்  டையில் சட்ட விரோதமாக ஊராட்சி மன்றத் தலைவர்கள் கையெழுத்திடுகின்றனர். இந்தியா வில் வேறு எந்த மாநிலத்திலும், சட்டத்திலும் இல்லாத நடைமுறையை புகுத்தியுள்ளனர். இத னால் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மாற்றுத்திற னாளிகளைஅவமதிப்பதோடு, பணியையும் மறுக்கின்றனர். எனவே, இந்த முறையை தமிழக  அரசு ரத்து செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் 4 மணி நேரம் வேலை  செய்தால் போதும் என்ற நிலையில், 8 மணி நேரம் பணித் தளத்திலேயே இருக்க வேண்டும், காலை  7 மணிக்கு வந்து மாலை 5 மணிக்கு செல்ல  வேண்டும் என்றெல்லாம் நிர்பந்திக்கின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும். மாற்றுத்திற னாளிகளுக்கென்று தனியாக என்எம்ஆர் பதி வேட்டை பராமரிக்க வேண்டும். 4 மணி நேரம் வேலை, முழு ஊதியம் என்பதை உறுதி செய்ய  வேண்டும். மாற்றுத்திறனாளிகளை குழுவாக பிரித்து  பணித்தளத்தில் குழந்தைகளை பராமரிப்பது, குடிநீர் கொடுப்பது போன்ற இலகுவான பணி களை வழங்க வேண்டும் என்று சட்டம் கூறி யிருப்பதை அமல்படுத்த வேண்டும். ஏற்கெனவே உள்ள சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதனையடுத்து காவல்துறையினர் சங்கத்  தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த னர். கோயம்பேட்டில் கைது செய்யப்பட்டுள்ள வர்களை விடுவித்தால் மட்டுமே பேச்சுவார்த் தைக்கு வருவதாக தலைவர்கள் தெரிவித்தனர். இதன் பின்னர் கோயம்பேட்டில் அனைவரும் விடுவிக்கப்பட்டு சைதாப்பேட்டைக்கு கொண்டு வரப்பட்டனர்.

பேச்சுவார்த்தை

அதன்பின்னர் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பிரவீன் நாயர், துணை ஆணையர் குமார் ஆகியோருடன் சங்க நிர்வாகிகள் பா. ஜான்சிராணி, எஸ்.நம்புராஜன், பாரதி அண்ணா, பகத்சிங்தாஸ், தமிழ்செல்வி, கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ்பாபு, சங்கர், நாகராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். “இந்தப் பேச்சுவார்த்தையில் சங்கத்தின் கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்றுக் கொண்ட னர். மாற்றுத்திறனாளிகள் பணி கோரி இனி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (பிடிஓ) மனு  கொடுத்தால் போதுமானது. ஊராட்சித் தலைவர்  தலையீடு இருக்காது. வீட்டுவரி, தண்ணீர்வரி செலுத்தினால்தான் பணி என்பது கட்டாய மில்லை. தேசிய மொபைல் கண்காணிப்பு முறை யில் (என்எம்எம்எஸ்) போட்டோ எடுப்பதில் உள்ள சிக்கல் சரி செய்யப்படும். வட்டார வளர்ச்சி அலுவலர் மாதம் 2வது செவ்வாய் கிழமையும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் 2 மாதத்திற்கு ஒரு  முறையும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் நடத்த உத்தரவிடப்படும் என்று  அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்” என்று சங்கத்  தின் தலைவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக முடித்துக்கொள்ளப் பட்டது.


 

;