states

7 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு உப்பு நிறுவன தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம்

இராமநாதபுரம், டிச.1- 7 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்  நாடு அரசு உப்பு நிறுவன தொழிலா ளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப் பந்தம் ஏற்பட்டுள்ளது. சிஐடியு சங்  கம் மற்றும் உப்பு நிறுவன நிர்வா கம் இடையே டிஜிஎல் முன்னிலை யில் ஒப்பந்தம் ஆனது. சிஐடியு சங்  கம் நடத்திய போராட்டத்திற்கு வெற்றி  கிடைத்துள்ளது. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து நிர்வாகத்திடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், ஊதிய உயர்வு வழங்க நிர்வாகம்  முன் வரவில்லை. பின்னர் மதுரை டிசிஎல் அலுவலகத்தில் ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தித்தர வேண்டும் என மனு தாக்கல் செய்  யப்பட்டது. குறைந்தபட்ச கூலியை விட ரூ.50 உயர்த்தி தர வேண்டு மென தொழிற்சங்க தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. நிர்வாகத் தரப்பில் ஊதிய உயர்வு தர வாய்ப்பு இல்லை என்று  ஒரு கட்டத்தில் தெரிவித்த போது,  சிஐடியு தொழிற்சங்கம் சார்பில்  வேலை நிறுத்தத்திற்கு அறை கூவல் விடுக்கப்பட்டு, இரண்டு நாள் வேலை நிறுத்தம் நடைபெற் றது. அப்போது ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் நிர்வாகத் தரப்பில் ரூ. 11 குறைந்தபட்ச கூலியை விட  உயர்த்தி தருவதாக தொழிற்சங்கத் திடம் உறுதி அளிக்கப்பட்டது.

அதன்படி டிசம்பர் 1 அன்று  மதுரை தொழிலாளர் இணை ஆணையாளர் லிங்கம் முன்னி லையில் நிர்வாகத் தரப்பில் திட்ட  மேலாளர் கே.விஜயன், உதவி  திட்ட மேலாளர்கள் வெங்கடேசன், ராமகிருஷ்ணன், கணினி இயக்கு னர்/ பிரிவு அலுவலர் சுரேஷ்பாபு ஆகியோர் நிர்வாகத் தரப்பிலும், சிஐடியு மாவட்ட செயலாளர் எம். சிவாஜி, உப்பு நிறுவன சங்கத்  தலைவர் கே.பச்சமால், செயலா ளர் வி.குமரவடிவேல், பொருளா ளர் முருகேசன் மற்றும் நிர்வாகி கள் தனிராம், காட்டுராஜா, ஆனந்த ராஜ், முருகவேல், குழந்தைவேல் ஆகியோர் தொழிற்சங்க தரப்பி லும் கலந்து கொண்டு, நடை பெற்ற பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட் டது.  இந்த ஒப்பந்தம் மூன்று ஆண்டு களுக்கு நடைமுறையில் இருக்  கும் என்று சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளார்.

;