states

மூச்சுத் திணறும் வாடகை ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் ,வாகன எரிவாயு விலையும் கடும் உயர்வு

புதுதில்லி, மே 20 - மோடி ஆட்சியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை (Liquefied Petroleum Gas -LPG Cylinder) ஆயி ரம் ரூபாயைத் தாண்டி விற்பனை யாகிக் கொண்டிருக்கிறது.  இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் சிலிண்டருக்கு 103 ரூபாயும், கடந்த 12 மாதங்களில் 193 ரூபாயும், கடந்த 17 மாதங்களில் 318 ரூபாயும் மோடி அரசால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது 14.2  கிலோ எடை கொண்ட சமையல் எரி வாயு சிலிண்டர் விலை ஆயிரத்து 18 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. இதேபோல வணிகப் பயன்பாட்டி ற்கான எரிவாயு சிலிண்டர் விலை யும் 2 ஆயிரத்து 507 ரூபாயை எட்டியிருக் கிறது. 60 நாட்களில் 457 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மோடி அர சானது, வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு (Compressed Natural Gas -CNG) சிலிண்டரின் விலையையும் சத்தமே இல்லா மல் இரண்டு மடங்கு அளவிற்கு  உயர்த்தியிருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வருகிறது. இதுவே மும்பை போன்ற நகரங்களில் 120  ரூபாயைத் தொட்டு விட்டது. மும்பை யில் டீசல் விலையே 104 ரூபாயைத் தாண்டி விற்கப்பட்டு வருகிறது.

கடந்த 44 நாட்களாக பெட்ரோல் - டீசல் விலை உயர்த்தப்படவில்லை. ஒருவேளை அவ்வாறு நடந்திருந் தால், இந்நேரம் லிட்டர் 130 ரூபாயைத் தொட்டிருக்கும்.  இதுஒருபுறமிருக்க, பெட்ரோல், டீசல் விலை உயர்வின் எதிர்கால பிரச்சனைகள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு அவசியத்தை உணர்ந்து தான், இந்திய ஆட்டோமொபைல் துறையினர், நீண்டகாலத்திற்கு முன்பே இயற்கை எரிவாயு-வில் இயங்கும் சிஎன்ஜி வாகனங்களை அறிமுகப்படுத்தினர்.  முதலில் சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டே, இந்த  வாகனங்கள் அறிமுகப்படுத்தப் பட்டன. பெட்ரோல் டீசல் உமிழும் மாசுவை விட சிஎன்ஜி எரிவாயு வாக னங்கள் உமிழும் மாசு குறைவு என்ப தால் அரசுகளும் இந்த ரக வாகனங் களின் பயன்பாட்டை ஊக்குவித்தன. கர்நாடகா உள்ளிட்ட பல மாநி லங்களில், குறிப்பாக பெருநகரங் களில் பெட்ரோல், டீசல் வாகனங் களுக்கு தடையே விதிக்கப்பட்டது. அங்கெல்லாம் சிஎன்ஜி-யில் இயங்கும் ஆட்டோக்கள்தான் தற் போது பயன்பாட்டில் இருந்து வரு கின்றன. பலர் தங்களின் கார்களை யும் சிஎன்ஜி பொருத்தப்பட்ட கார் களாக மாற்றிப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.

மாசுக்கட்டுப்பாடு என்பதை யெல்லாம் தாண்டி, பெட்ரோல் - டீசலை விட சிஎன்ஜி எரிபொருளின் விலை குறைவு என்பதே இதற்கு மிக முக்கியமான காரணமாகும்.  ஆனால், நரேந்திர மோடி அர சானது விலைவாசி உயர்விலிருந்து அவர்களையும் விட்டுவைப்பதாக இல்லை சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை உயர்த்தியது போல, வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு (Compressed Natural Gas - CNG) விலைகளையும் பல மடங்கு உயர்த்தியிருக்கிறது. கடந்த மார்ச் 7-ஆம் தேதிக்குப் பிந்தைய 2 மாதத்தில் மட்டும் மோடி அரசானது சிஎன்ஜி எரிவாயு விலை யை இதுவரை 12 முறை உயர்த்தி யுள்ளது. கிலோ ஒன்றுக்கு 17 ரூபாய்  60 காசுகள் விலை உயர்த்தப் பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் சிஎன்ஜி எரிவாயு விலை கிலோ ஒன்றிற்கு 7 ரூபாய் 50 காசுகள் அள விற்கு உயர்ந்துள்ளது. கடந்தாண்டு எரிவாயு விலையை ஒப்பிடும் போது இந்தாண்டு 60 சதவிகிதம் விலை அதிகமாகியுள்ளது. 

அதாவது, வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலையும், ஏறக் குறைய பெட்ரோல் - டீசல் விலையை நெருங்கிவிட்டது.  தில்லியில் ஒரு கிலோ சிஎன்ஜி எரிவாயு விலை கடந்த ஏப்ரலில் 71 ரூபாய் 61 காசுகளாக இருந்தது, மே மாதத்தில் 73 ரூபாய் 61 காசுகளாகி விட்டது. பெங்களூருவில் ஏப்ரலில் 75 ரூபாயாக இருந்த ஒரு கிலோ சிஎன்ஜி விலை மே மாதத்தில் 83 ரூபாயாக உயர்ந்து, ஒரே மாதத்தில் 8 ரூபாய் அதிகரித்துள்ளது. ஹைத ராபாத்தில் 85 ரூபாயாகவும், மும்பை யில் 76 ரூபாயாகவும் விலை அதி கரித்துள்ளது. தற்போது விற்பனையாகும் விலையிலிருந்து கிலோவிற்கு 30 ரூபாய் 21 காசுகள் குறைவான விலை யிலேயே கடந்த 2021 அக்டோப ருக்கு முன்பு சிஎன்ஜி எரிவாயு விற்கப் பட்டு வந்தது. அது ஓராண்டுக்குள் இரண்டு மடங்காகி விட்டது. மாசுக்கட்டுப்பாட்டிற்கு நாமும் பங்களிப்போம் என்று கூறி, சிஎன்ஜி  எரிவாயு வாகனத்திற்கு மாறியவர் கள், மோடி அரசின் இந்த தாக்கு தலால் தற்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

;