states

வி.ஏ.ஓ., கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண் டம் தாலுகா முறப்பநாடு கிராம  நிர்வாக அலுவலராக பணிபுரிந்த வர் லூர்து பிரான்சிஸ். இவர் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்து வந்தார். மணல் கொள்ளையர்கள் மீது  முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார்  அளித்தார். கடந்த 25.4.2023-ல் அலுவல கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த லூர்து  பிரான்சிஸை மணல் கொள்ளையர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராம சுப்ரமணியன், மாரிமுத்து ஆகி யோரை போலீசார் கைது செய்தனர். விசா ரணை அதிகாரியாக தூத்துக்குடி ரூரல்  டிஎஸ்பி சுரேஷ் நியமனம் செய்யப்பட்  டார். இந்த கொலை வழக்கில் 52 சாட்சி கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் கொலை செய்ய பயன்படுத்தப் பட்ட அரிவாள், இரும்பு ராடு, உள்ளிட்ட  13 பொருட்கள் குறியீடு செய்யப்பட்டுள்  ளன. இவ்வழக்கின் விசாரணை தூத்துக் குடி மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதி பதி செல்வம் முன்னிலையில் திங்களன்று துவங்கியது.  விசாரணைக்காக குற்றவாளிகள் ராமசுப்பு, மாரிமுத்து ஆகியோரை காவல்  துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். விசாரணையில் சாட்சிகளான கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்த்து பிரான்ஸிஸ் மகன்  ஏசுவடியான், கிராம நிர்வாக உதவியா ளர் கணேசன் அருணாச்சலம், ஆறுமுகம்,  பிரின்ஸ் உள்ளிட்ட 5 பேர் திங்களன்று நீதி மன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்த னர். செவ்வாயன்று 11 சாட்சிகள் விசா ரிக்கபடுகின்றனர். இம்மாத இறுதிக்குள்  சாட்சிகளிடம் முழுமையாக விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது. இவ்வழக்  கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மோகன்  தாஸ் சாமுவேல் ஆஜரானார். குற்றம்  சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர் மகேந்திரன் ஆஜரானார்.