மேற்குவங்க உள்ளாட்சி தேர்தல் அறி விக்கப்பட்டதில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர் களை வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் மிரட்டியும், அவர்கள் மீது கொலைவெறி தாக்குதலையும் திரிணாமுல் குண்டர்கள் தொடுத்து வருகின்றனர். ஜூன் 14 அன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர் சோமா தாஸ் சக்கரவர்த்தி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி ராணா ராய் ஆகியோர் மீது திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் கொடூர தாக்குதலை நிகழ்த்தி இருந்தனர். இதற்கு முன்னதாக ஜூன் 9 அன்று முர்ஷிதாபாத் ராணி நகரில் சிபிஎம் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்த போது திரிணாமுல் குண்டர்கள் உள்ளூர் ரவுடிகளுடன் தாக்குதல் நடத்தினர். அதே தினத்தில் மற்றொரு பகுதியில் காங்கிரஸ் ஊழியர் ஒருவர் படுகொலை செய்யப் பட்டார். இவ்வாறு திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி எதிர் கட்சியினர் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வேட்பாளர்களை வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் மிரட்டி வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு
வேட்பு மனுத்தாக்களின் இறுதி நாளான ஜூன் 15 அன்று சோப்ரா வில் வேட்புமனு தாக்கல் செய்ய இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்ற போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ வீட்டின் அருகில் திரிணாமுல் குண்டர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.இந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இருபது பேர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்துள்ளனர். அன்றைய தினம் பிற்பகலில், பாங்கூரில் திரிணாமுல் மற்றும் இந்திய மதச்சார்பற்ற முன்னணிக்கு (ISF) இடையேயான மோதல் நடந்தது . இதில் மதச்சார்பற்ற முன்னணியின் ஊழியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பல இடங்களின் மாநில காவல்துறை ஆளும் கட்சிக்கு சாதகமாக கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தது. சோப்ராவில் திரிணாமுல் குண்டர்கள் நிகழ்த்திய கொலை குறித்து காங்கிரஸ் ஏற்கனவே உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்தை ஈர்த்துள்ளது. தலைமை நீதிபதி டிவிஷன் பெஞ்ச் நீதி வழங்குவதாக உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், வியாழன் அன்று, கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி ராஜசேகர் மந்தா, நீதிமன்றத்தில் ஆஜராகும் அனைத்து எதிர்க்கட்சி வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய உதவ வேண்டும் என்றும், எதிர்க்கட்சி வேட்பாளர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கொல்கத்தா காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தேர்தல் ஆணையம் முன் ஆர்ப்பாட்டம்
சோப்ரா சம்பவத்திற்கு எதிராக வியாழக்கிழமை (ஜூன் 15) மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாநில செய லாளர் முகமது சலீம் அழைப்பு விடுத்தார். திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. பயங்கர வாத வன்முறை அரசியல் கடும் விளைவு களை ஏற்படுத்தி வருகிறது. மக்களின் எதிர்ப்பும் வலுக்கிறது. இறுதியில் மக்களின் உறுதியே வெல்லும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார். கூட்டத்தில் உரையாற்றிய மாநில செயலாளர் முகமது சலீம் “மாநில காவல்துறையின் ஒரு பகுதி திரிணாமுல் கும்பல்களுக்கு ஒத்துழைக்கிறது. மேலும் மாநில தேர்தல் ஆணை யம் முற்றிலும் செயலற்றதாகவும் பொறுப்பற்ற தாகவும் உள்ளது. மம்தா பானர்ஜியின் கீழ் செயல்படும் பொறுப்பற்ற நிர்வாகத்தின் இந்த ஒருதலைப்பட்ச அணுகுமுறைக்கு விலை கொடுக்க வேண்டும்” என்றார்.