states

தீக்கதிர் விரைவு செய்திகள்

இன்று போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை

சென்னை, ஜூலை 10 - போக்குவரத்து ஊழியர்களுக்கான 14 வது ஊதிய ஒப்பந்தம் குறித்த  5 ஆம் கட்ட பேச்சுவார்த்தை திங்களன்று (ஜூலை 11) குரோம்பேட்டையிலுள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெறுகிறது. 14வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை 1.9.2019 முதல் அமலாகி இருக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் 2  முறையும், திமுக ஆட்சியில்  2 முறையும் பேச்சுவார்த்தை நடந்துள் ளது. கடந்த மே மாதம் 12 ஆம் தேதி  கடைசியாக பேச்சுவார்த்தை நடந்தது. இதிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் வேலைநிறுத்த எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமை யில் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற  உள்ளது.

நீட் தேர்வு: இன்று  ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை,ஜூலை 10- இளநிலை நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை திங்கட்கிழமை (ஜூi1) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு வரும் 17ஆம் தேதி தேசிய தேர்வுகள் முகமை சார்பில் நடத்தப்படுகிறது. பிற்பகல் 2  மணி முதல் மாலை 5.20 மணி வரை  இந்த தேர்வு நடைபெறுகிறது. இதற்காக, நாடு முழுவதும் 546 முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, வேலூர்,  காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட முக்கிய நகரங்களில்  தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள் ளன. இந்நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை நாளை முதல் பதி விறக்கம் செய்து கொள்ளலாம் என்றும்  தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதன்படி தேர்வு விண்ணப்பங்களை சமர்பித்தவர்கள் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் தங்களின் பதிவு மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது

எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை

சென்னை,ஜூலை 10- எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறி விப்பை தொழில்நுட்ப கல்வி இயக்ககம்  வெளியிட்டுள்ளது. 2022-2023 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல்  கல்லூரி மற்றும் கலைக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகம், வட்டார மையங்கள், அண்ணாமலை பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக் கழகம், இதர பல்கலைக் கழகங்கள், சுயநிதி பொறியியற் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேர்க்க  விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இதன்படி www.gct.ac.in, www.tn-mbamca.com என்ற  இணையதளங்கள் மூலம் விண்ணப்பங் களை சமர்பிக்கலாம். இரண்டு பட்டப் படிப்புகளுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். ஜூலை  11 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை விண்ணப் பங்களை சமர்பிக்கலாம்.