states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தோழர் பி. சீனிவாசராவ் அவர்களின் 62-ஆவது நினைவு தினத்தையொட்டி திரு வாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள  அவரின் திருவுருவச் சிலைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. பாலபாரதி தலைமையில் செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தர மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாக ராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில  பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக பூமி யின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து வெளியே பயணித்து வருவதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு 3000 கனஅடி நீரை திறந்து விட உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடகா மனு  தாக்கல் செய்துள்ள நிலையில், உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி காவிரி மேலாண்மை ஆணையத்திலும் முறையிட்டுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டியில் 10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர்கள் கார்த்தி வெள்ளிப்பதக்கமும், குல்வீர் சிங் வெண்கலப் பதக்கமும் வென்றனர். 

அதிமுக, பாஜகவுடன் இணைந்திருந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் தனி யாக பாஜகவால் வெற்றிபெறமுடியுமா? என்றும்  பல்வேறு தகவல்களை, பாஜகவின் பல மாவட்ட  தலைவர்களிடமிருந்து பெற்று அதனைக் கொண்டு அறிக்கை தயார் செய்து நிர்மலா சீதா ராமன் கட்சியின் மேலிடத்தில் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து  திடீரென அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு  கருதி பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.

“பல படங்களை இயக்கி இருக்கிறேன். நடித்தும் வருகிறேன். எனக்கு இப்படியான  அனுபவம் வாய்த்ததில்லை. ஆனால் நான் தயா ரித்த ’அப்பா’ திரைப்படத்தின் வரி விலக்குக்காக லஞ்சம் அளிக்க நேரிட்டது. நியாயமாக பார்த்தால்  ’அப்பா’ திரைப்படத்தை அரசே எடுத்திருக்க வேண்டும். அப்படியொரு படைப்பை உருவாக்கிய தோடு, வரிவிலக்குக்காக லஞ்சம் கொடுக்க வேண்டி யதாயிற்று” என நடிகரும், இயக்குநருமான சமுத்தி ரக்கனி கூறினார்.