states

சிபிஎம் மாநிலக்குழு அலுவலக கட்டிட நிதி

திருப்பூர், ஜூலை 29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக் குழு கூட்டம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால் தலைமையில் புதனன்று நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாரன், மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் உள்பட மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகமான தோழர்  பி.ராமமூர்த்தி நினைவகம் புதுப்பிக்கும் பணிக்கு கட்சியின் மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் முதல் தவணையாக ரூ.29,500 வழங்கினர்.  திருப்பூர் மாவட்டத்திற்கு நிர்ண யிக்கப்பட்டுள்ள இலக்கு தொகையை திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே, செப்டம்பர் மாதம் தோழர் கே.தங்கவேல் நினைவு தினத்தில் முழுமையாக ஒப்படைப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.