states

உடற்கூராய்வு நிறைவு: திருவள்ளூர் மாணவி உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

திருவள்ளூர், ஜூலை 26- திருவள்ளூர் மாவட்டம் திருத்  தணி அருகே கீழச்சேரி பள்ளியில்  உயிரிழந்த 12 ஆம் வகுப்பு மாண வியின் உடல், உடற்கூராய்வுக்குப் பின்னர் மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவள்ளூர் கீழச்சேரியில் உள்ள  அரசு உதவிபெறும் பள்ளியில் தெக்க ளூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலை யில், திங்களன்று (ஜூலை25) மாணவி  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவம்  நடந்த பள்ளிக்கு வந்த காவல்துறை யினர், மாணவியின் உடலை கைப்பற்றி னர். மேலும், மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர். கல்வி நிறுவனங்களில் நிக ழும் மரணங்கள் தொடர்பான வழக்கு களை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவின்படி, திருவள்ளூர் மாணவி மரணம் குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி  மாணவியின் உடலை வாங்க அவரது பெற்றோர் மற்றும் உறவினர் கள் மறுத்துவந்தனர். பிறகு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில், மாண விக்கு செவ்வாயன்று(ஜூலை 26) உடற் கூராய்வு செய்யப்பட்டது. இந்த உடற் கூராய்வு முழுவதும் வீடியோப் பதிவு  செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவி யின் பெற்றோர் மற்றும் உறவினர்களி டம் அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக் கொண்டனர். இதன் பின்னர், மாணவியின் உடல் அவரது சொந்த ஊரான தெக்களூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

போராட்டம்

மாணவியின் மரணத்துக்கான காரணத்தை தெரிவிக்கக் கோரி மாண வியின் சொந்த ஊரான தெக்களூ ரில், அவரது உறவினர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். அசம்பாவித சம்ப வங்களைத் தவிர்க்கும் பொருட்டு, மாணவியின் சொந்த ஊரிலும், மாணவி படித்த பள்ளியிலும் பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.