சென்னை,ஜூன் 25- விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரு மான தொல். திருமாவள வன், தனது தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டி ருந்தார். இதனிடையே, தமிழக முதல்வர் ஸ்டாலின் சனிக் கிழமையன்று (ஜூன் 25) விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திரு மாவளவனை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, அவரது தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்தறிந்து, விரைவில் அவர் முழுமையாக குணம் பெற்று வீடு திரும்ப தனது விருப்பத்தை தெரிவித்தார்.