மேகாலயா ஆளுநர் கண்டனம்
லக்னோ, ஜூன் 27 - ராணுவத்தில் நான்காண்டு காண்ட்ராக்ட் அடிப்படையில் வீரர்களை நியமிக்கும் ‘அக்னிபாதை’ திட்டம், இந்திய இளைஞர்கள் மீதான மோசடி என்றும், இத்திட்டத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் திருமண வரன்கள் அமைவதில் கூட சிக்கல் ஏற்படும் என்றும் மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் பேசியுள்ளார். ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநரும், தற்போதைய மேகாலயா ஆளுநருமான சத்யபால் மாலிக் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘எதிர்கால போர் வீரர்களான இளைஞர்களுக்கு அக்னிபாதை திட்டத்தில் 6 மாதம் பயிற்சியும், 6 மாதம் விடுப்பும் கிடைக்கிறது. மீதமுள்ள 3 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வூதியமே இல்லாமல் அவர்கள் வீடு திரும்புகின்றனர். அடிப்படையில் இந்த திட்டம் ஒரு தவறான திட்டம். இது ராணுவத்தின் கவுரவத்துக்கே எதிரானது. அரசாங்கம் உடனடியாக இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் ராணுவத்தின் மதிப்பு குறைந்துவிடும். அக்னிபாதை திட்டம் மூலம் 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரியும் அக்னிவீரர்களுக்கு எதிர்காலத்தில் திருமண வரன்கள் கூட கிடைக் காது. 4 ஆண்டுகள் மட்டுமே வேலை செய்யும் வீரருக்கு யார்தான் பெண் கொடுப்பார்கள்? அந்த வகையில் அக்னிபாதை திட்டம் எதிர்கால வீரர் களுக்கு எதிரானது. அவர்களின் நம்பிக்கை மீதான மோசடி இது. எனவே, அரசு பழைய நடைமுறை களின் படியே ராணுவ ஆட்சேர்ப்பை நடத்த வேண்டும்.” இவ்வாறு சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.