2001 அக்டோபரில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2021 ஆகஸ்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முற்றாக விலகின. தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஆப்கானிஸ்தானின் நிதி அமெரிக்க வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் வசம் ஆட்சி மாறியவுடன் பல திறமைசாலி மக்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். பல மருத்துவத்துறை ஊழியர்களும் வெளியேறிவிட்டனர். இதனால் நெருக்கடியான நிலையில் தாலிபான்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் 93 சதவிகித மக்கள் பசி, பட்டினியால் வாடுகின்றனர். 1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானில் பல மாநிலங்களில் ஆட்சி நடத்திய அனுபவம் தலிபான்களுக்கு உள்ளது. இருப்பினும் கடந்த பல மாதங்களாக தாலிபான்களின் பத்தாம் பசலித்தனம் வெளிப்பட்டு வருகிறது.