states

img

நல்லெண்ணெய் விலை கடும் உயர்வு; உளுந்து, பாமாயில் விலை குறைவு

விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தி யாவசிய உணவுப்  பொருட்களின் விலைப்பட்டிய லானது வெளியடப்பட்டு வருகிறது. அதன் விபரம் வருமாறு : நல்லெண்ணெய் 15 கிலோ டின்  கடந்த வாரம் ரூ.6435 என்ற விலைக்கு  விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.330 வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் டின் ஒன்று ரூ.6765 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. பாமாயில் கடந்த வாரம் 15 கிலோ  ரூ.1420 என விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.30 குறைந்து, ரூ.1390க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் பாசிப் பருப்பு 100 கிலோ ரூ.10,300 என்ற விலைக்கு விற்கப்பட்ட நிலையில் இந்த வாரம்  மூட்டை ஒன்றுக்கு ரூ.100 வரை  குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.10,200 என்ற  விலைக்கு விற்பனை செய்யப்படு கிறது. கடந்த வாரம் நாடு வகை உளுந்து  100 கிலோ ரூ.8500க்கு விற்கப்பட்டது.

 இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.100  வரை குறைந்து தற்போது ரூ.8400க்கு  விற்கப்படுகிறது. இதேபோல் லயன் வகை உளுந்து கடந்த வாரம் ரூ.8900 என்ற விலைக்கு விற்பனையானது. இந்த வாரம் ரூ.100 குறைந்து தற்போது ரூ.8800 என விற்பனையாகிறது.  மல்லி லயன் வகை கடந்த வாரம்  40 கிலோ ரூ.3300 முதல் ரூ.3600 வரை  விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டை  ஒன்றுக்கு ரூ.100 வரை குறைவு ஏற்பட்டு தற்போது ஆரம்பக்கட்ட விலையானது ரூ.3200 முதல் ரூ.3500  வரை விற்கப்படுகிறது. காபி வகைகளில் ஒரு சிலவற்றின்  விலை உயர்ந்தும் சில குறைந்தும் காணப்பட்டன. காபி பிளாண்டேசன் பி.பி வகை  50 கிலோ கடந்த வாரம் ரூ. 20,100 என  விற்கப்பட்டது. இந்த வாரம் திடீரென ரூ.1200 வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக ரூ.18900 என்ற விலைக்கு விற்கப்பட்டது. இதேபோல் காபி பிளாண்டேசன்  ஏ வகையானது கடந்த வாரம் ரூ. 20,600 என்ற விலைக்கு விற்கப்பட் டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.1400 வரை குறைந்துள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.19200 என விற்கப்படுகிறது. மேலும், காபி பிளாண்டேசன் சி.சி  வகையானது கடந்த வாரம் ரூ. 17300க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.300 குறைந்துள்ளது. எனவே, ரூ.17ஆயிரத்திற்கு விற்பனை யாகிறது. ரோபாஸ்டா காபி விலை உயர்வு  ரோபாஸ்டா பி.பி வகையானது  50 கிலோ ரூ.10,700 வரை விற்கப் பட்டது. இந்த வாரம் ரூ.2450 வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, 13150 வரை விற்பனையாகிறது. இதேபோல் பிளாக்பிரவுன் காபி  வகையானது கடந்த வாரம் ரூ. 9600க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.1900 வரை உயர்ந்துள்ளது. எனவே, மூட்டை ஒன்று 11500க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.