states

img

கடும் சரிவு

பெய்ரூட், மே 27- லெபனான் நாணயமான பவுண்டு இதுவரையில் இல்லாத அளவுக்குக் கடுமையாக சரிவைக்கண்டுள்ளது. பரிமாற்ற விலை என்பது 35 ஆயிரத்து 600 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக 26 ஆயிரத்து 800 ஆக இது இருந்தது. நெருக்கடியை நோக்கி  லெபனான் பொருளாதாரம் நகருகிறது என்பதையே இது காட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். இந்தப் பரிமாற்ற விலை அதிகாரபூர்வமானது இல்லை என்றாலும், இந்த விலையில்தான் டாலர் பரிமாற்றம் லெபனானில் நடந்து கொண்டிருக்கிறது. பெட்ரோல் விலை கடந்த மூன்று வாரங்களில் 25 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. புதிய அரசு பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது.