states

முகக் கவசம் கட்டாயம்!

சென்னை,ஏப்.25- தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் கடந்த  2 ஆண்டுகளாக மிக கடுமை யான பாதிப்பை ஏற்படுத்தி யது. குறிப்பாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது மற்ற மாநிலங்களில் வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கையாக தமிழ்நாட்டில் பொது  இடங்களில் முகக்கவசம்  அணிவது கட்டயாமாகப் பட்டுள்ளது. தவறினால் 500  ரூபாய் அபதாரம் விதிக்கப் படுகிறது. இந்த விவாகாரம் சட்டப் பேரவையிலும் எதிரொ லித்தது. சட்டப்பேரவையில் அமைச்சர்கள், ஆளும் கட்சி, எதிர்க் கட்சிகளின் உறுப்பி னர்கள் பலரும் முகக் கவசம்  அணியவில்லை. இது குறித்து எதிர்க் கட்சித் துணைத் தலைவர் எழுப்பிய  கேள்விக்கு பதில் அளித்த  சுகாதாரத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன், “அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். கிருமி நாசனி களை கொண்டு அடிக்கடி கை கழுவும் நடை முறையை யும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். அதுதான் அனை வருக்கும் பாதுகாப்பானது” என்றார்.