states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்காவிடம்  உடல்நலம் குறித்து தொலைபேசி யில் கேட்டறிந்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்  படாது என்பதற்கு எவ்வித உத்தரவாதம் இல்லை. பள்ளிக் குழந்தைகள், பொது மக்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என கூறி அதிமுக தலைமையக சீலை அகற்ற நீதிமன் றத்தில் காவல்துறை எதிர்ப்பு தெரிவித்து சீலை  அகற்றக்கோரி தொடரப் பட்ட வழக்கில் திங்கட் கிழமைக்கு தீர்ப்பை ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரத் தினத்தன்று (ஆக., 15) பள்ளி, கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், அரசு, தனி யார் நிறுவனங்கள், சந்தைகள் வழக்கம் போல  செயல்படும் என உத்தரப் பிரதேச பாஜக அரசு அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

இலங்கை ஜனாதிபதி மாளிகையில் போராட்டக் காரர்கள் முக்கிய ஆவண அலுவலகம், முக்கிய சின்னங்கள், நினை விடங்கள் என அனை த்தையும் சூறையாடிய நிலையில்,  அந்நாட்டு தடயவியல் குழுக்கள் ஆய்வு செய்து வரு கின்றன.

தனது அந்நியக் கடனைத் தொடர்ந்து கட்டி வர வேண்டும் என்று உக்ரைனுக்கு சர்வதேச நிதி அமைப்பு (ஐ.எம்.எப்) வலியுறுத்தியுள்ளது. ரஷ்யாவுடனான நெருக்கடியைக் காரணம் காட்டித் தனது கடனைக் கட்டாமல் உக்ரைன் இருந்து விடும் என்று கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதை சுட்டிக்காட்டியே ஐ.எம்.எப். தனது ஆலோசனையை உக்ரைனுக்கு அளித்துள்ளது. அவ்வாறு கடனைக் கட்டாவிட்டால் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவிடமிருந்து இயற்கை எரிவாயு கிடைக்கவில்லை என்பதை மனதில் கொண்டு, நிலைமையைச் சமாளிக்க வேண்டும் என்று பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார். ரஷ்யாவின் எரிவாயு இல்லாமல்தான் பிரான்ஸ் இருக்கப் போகிறது என்ற முடிவுக்கு சென்றுவிட வேண்டும் என்றும், இப்போதைக்கு எரிவாயு நுகர்வை மக்கள் பெரும் அளவில் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து மேற்கொள்ளப்படவிருக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் உரங்களின் ஏற்றுமதிக்கான நிதிப் பரிவர்த்தனைகள் தடைகளை மீறியதாக கருதப்படாது என்று அமெரிக்கா கூறியுள்ளது. உக்ரைனின் ஓடெசா துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் பெரும் அளவிலான உணவு தானியங்களை வெளிக்கொணர்வதற்கான உடன்பாடு ஒன்றை ஐ.நா. சபை மற்றும் துர்க்கியே முன்முயற்சியால் எட்டப்பட்டிருக்கிறது. இதன்படி வங்கிகள், கப்பல் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.