states

மாணவர் போராட்டம் வாபஸ்

சிதம்பரம், மே.2- அரசு மருத்துவக் கல்லூரி யில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தை சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரியிலும் வசூலிக்க வலியுறுத்தி  கடந்த  21 நாட்களாக மாணவர்கள்  தொடர்ந்து கவன ஈர்ப்பு  போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில்  சென்னை யில்  அமைச்சர் மா. சுப்பிர மணியனுடன்  மருத்துவ மாணவர்களின் பெற்றோர், மாணவர்கள்,  சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் பேச்சு நடத்தி னர்.கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து போராட்டம்  தற்காலிகமாக நிறுத்திவைக் கப்பட்டுள்ளது.