states

காசா மீது இஸ்ரேல் போர் சில முக்கிய கள நிகழ்வுகள்

  1. ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகியதேசங்களின் பிரதமர்கள் காசாவில் போர்நிறுத்தம்தேவை என கூட்டறிக்கை விட்டுள்ளனர். அந்த தேசங்களில் நடக்கும் வலுவான ஆர்ப்பாட்டங்களின் நிர்ப்பந்தம் இது!
  2. அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக்சல்லிவனும் ராணுவ அமைச்சர்லாயிட் ஆஸ்டினும் இஸ்ரேல் செல்கின்றனர். இவர்களது அறிவுரைகளை நேதன்யாகு செவிமடுப்பாரா?
  3. ஹமாஸ் சிறைபிடித்த பணயக்கைதிகளில் இதுவரை 19 பேரின் இறந்த உடல்கள் கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இவர்கள்இஸ்ரேலின் குண்டு வீச்சில் கொல்லப்பட்டனர். பணயக்கைதிகளின் உயிர் பாதுகாப்பு குறித்து இஸ்ரேல்கவலைப்படவில்லை எனும் விமர்சனம் உண்மைஎன நிரூபிக்கப்பட்டுவருகிறது.
  4. காசாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18,500.சுமார் 40,000 கட்டிடங்கள் அதாவது 18 சதவீத கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன என ஐ.நா.கூறியுள்ளது.
  5. பூமிக்கடியில் ஹமாஸ் உருவாக்கியுள்ள ராணுவகட்டமைப்புகளுக்குள் கடல் நீரை செலுத்த இஸ்ரேல்தொடங்கியுள்ளது என வால்ஸ்டிரீட் ஜேர்னல் பத்திரிகை தெரிவித்துள்ளது.
  6. அமெரிக்காவின் ஆயுதங்கள் இஸ்ரேலுக்கு கிடைக்கும்வரை போர் நிறுத்தத்துக்கான சர்வதேச கோரிக்கைஎதுவும் வெற்றி பெறாதுஎன ஹார்லி ஷியாங்கர் எனும் பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
  7. புமா எனும் பன்னாட்டு விளையாட்டு உடை மற்றும் காலணிகளை தயாரிக்கும் நிறுவனம் காசா தாக்குதல் காரணமாக இஸ்ரேல் கால்பந்து அணியுடன் உள்ள ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டுள்ளது.
  8. இஸ்ரேல்- பாலஸ்தீனப் போர் அருகில் இருக்கும்அரேபிய தேசங்களின் பலவீனமான பொருளாதாரத்தை மேலும் பலவீனமாக்கும் என ஐ.நா.வின் ஆய்வு தெரிவிக்கிறது.