states

img

நவம்பர் 18 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

நாட்டின் தலைநகர் மண்டலமான தில்லியில் கடந்த சில நாட்க ளாக காற்று மாசு மிக மோசமான  அளவில் அதிகரித்து வருகிறது. காற்றின்  தரக்குறியீடு 400-க்கும் மேல் அபாயகர மான நிலையில் உள்ள நிலையில்,  தில்லியில் காற்று மாசுபாட்டைக் கருத்  தில் கொண்டு நவம்பர் 3 முதல் நவம்பர்  10 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில், காற்று மாசு காரண மாக தில்லி பகுதியின் அனைத்து பள்ளி களின் டிசம்பர் மாத குளிர்கால விடுமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகளுக்கு நவம்பர் 9 முதல் நவம்பர்  18 வரை விடுமுறை அளிக்கப்படுவ தாகவும் தில்லி கல்வி இயக்குநரகம் புத னன்று அறிவித்தது.