states

தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவச பயிற்சி

சென்னை, அக்.9- தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பாது காப்பு கவசங்களை முறையாக பயன்படுத்துவது தொடர்பாக பயிற்சி அந்த பணியாளர்களுக்கு வழங்கப்பட வுள்ளதாக  தமிழ்நாடு அரசு அறிவித்து ள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரால் 9.12.2022 அன்று தூய்மைப் பணியாள ர்கள் மேம்பாட்டுத் திட்டம் மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட் டத்தின் கீழ் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கு வதற்கு வழிவகை செய்யப்பட் டுள்ளது. இத்திட்டத்தில், கீழ்க்காணும் பணிகளில் ஈடுபடும் நபர்கள் முக்கிய தூய்மைப் பணியாளர்களாக கருதப் படுவார்கள்:- கழிவுநீர் கட்டமைப்புகளை தூர்வாருபவர்கள் கழிவுநீர்த் தொட்டி களை சுத்தம் செய்பவர்கள், வணிக நிறுவனங்கள், பொது மற்றும் சமூக  கழிப்பறைகளை சுத்தம் செய்து பராமரிப்பவர்கள். கழிவுநீர் கட்ட மைப்பு மற்றும் உந்து நிலையங்களை இயக்கி பராமரிப்பு பணிகளை மேற் கொள்பவர்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ப வர்கள். முதற்கட்டமாக, பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-6, மதுரை மாநகராட்சி மண்டலம்-3, புதுக்கோட்டை மற்றும் பொள்ளாச்சி நகராட்சிகள், சேரன்மாதேவி பேரூ ராட்சி என ஐந்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றக்கூடிய முக்கிய தூய்மை பணியாளர்கள் குறித்த கணக்கெடுப்பு மேற்கொள் ளப்பட்டுள்ளது. நகர்ப்புர உள்ளாட்சி அமைப்பு களில் பணிபுரியும் பயிற்சி பெற்ற பணி யாளர்களால் முக்கிய தூய்மைப்  பணியாளர்களின் இறுதிப் பட்டி யல் சரிபார்க்கப் பட்டு 2,198 முக்கிய தூய்மைப் பணியாளர்கள் முதற் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள் ளனர். இரண்டாம் கட்டமாக, முக்கிய தூய்மைப் பணியாளர்களை கணக் கெடுக்கும் பணிகள் 646 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரிவு படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.  இந்த கணக்கெடுப்பில் கிடைக்கும் விவரங்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பி வைத்து சரிபார்க்கப்பட்ட பின்னர் முக்கிய தூய்மைப் பணியாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். முக்கியத் தூய்மைப் பணியாளர்களாக தேர்வு செய்யப்படுபவர்களின் பணித் தன்மைக்கேற்ப பாதுகாப்பான முறை யில் பணி செய்வது குறித்த பயிற்சிகள்,

அனைத்து மாவட்டங்களிலும் சம்பந் தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்படும். இப்பயிற்சியின் போது, 2022-ம் ஆண்டு தமிழ்நாடு மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு விதி களின்படி, பாதுகாப்பு கவசங்களை முறையாக பயன்படுத்துவது, அந்தந் தப் பணிக்கு ஏற்றவாறு எவ்வாறு பாது காப்பு கவசங்களை அணிந்து பயன் படுத்துவது போன்றவை தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சி வகுப்புகள் நிறைவடைந் தவுடன் சான்றிதழ் கள் மற்றும் பணி புரியும் பணிக்கு ஏற்றார்போல் பாது காப்பு கவசங்கள் மற்றும் உபகர ணங்கள் வழங்கப்படும். முக்கிய தூய்மைப் பணி யாளர்கள் அனைவரையும், தமிழ்நாடு  தூய்மைப் பணியாளர்கள் நலவாரி யத்தில் பதிவு செய்வதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி அளவில் வைப்பு நிதி உரு வாக்கப்படும். இத்திட்ட நிதியின் முன்னோடி முகமையாக நகராட்சி நிர்வாக இயக்குநரகம் செயல்படும். தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் ரூ.50 கோடி வைப்பு நிதியில் மாநில அரசின் பங்காக ரூ.10  கோடி அனுமதிக்கப்படுகிறது.