states

ரூ.4.33 லட்சம் கோடி வருவாய் ஈட்டி பாரத் பெட்ரோலியம் சாதனை!

புதுதில்லி, மே 27 - பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் (BPCL), கடந்த 2021-22 நிதியாண்டில் இது வரை இல்லாத அதிகபட்ச செயல்பாட்டு வரு வாயை ஈட்டி சாதனை படைத்துள்ளது. கடந்த 2021 ஏப்ரல் முதல் நடப்பு 2022 மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டில் பாரத் பெட்ரோ லியம் கார்ப்பரேசன் நிறுவனம் ரூ. 4 லட்சத்து 33 ஆயிரத்து 406 கோடியை செயல்பாட்டு வரு வாயாக ஈட்டியுள்ளது.  இது, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் இதுவரை ஈட்டியிராத அதிகபட்ச செயல்பாட்டு வருவாயாகும். முந்தைய 2020-21 நிதியாண்டில் ரூ 3 லட்சத்து ஓராயிரத்து 873 கோடியே 16 லட்சம் என்ற அள விலேயே செயல்பாட்டு அடிப்படையிலான வரு வாய் இருந்த நிலையில், ஓராண்டில் ரூ. 1 லட் சத்து 32 ஆயிரம் கோடி அளவிற்கு அதிகரித்துள் ளது. கடந்த நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் (2022 ஜனவரி முதல் 2022 மார்ச் வரையிலான காலகட்டத்தில்) மட்டும் நிறு வனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ. 1 லட்சத்து 23 ஆயிரத்து 550 கோடியே 93 லட்சமாக இருந்துள்ளது.

இது முந்தைய 2020-21 நிதியாண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டைக் காட்டிலும் 25 சதவிகிதம் அதிகமாகும். முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் ரூ. 98 ஆயிரத்து 763 கோடியே 80 லட்சம் அளவிற்கே செயல்பாடுகள் மூலமான தனிவருவாய் இருந்தது.  அதுமட்டுமல்ல, 2021-22 நிதியாண்டின் மூன்றாவது (அக்டோபர் முதல் டிசம்பர் வரை யிலான) காலாண்டில் ரூ. 1 லட்சத்து 18 ஆயிரத்து  536 கோடியே 76 லட்சம் என்ற அளவிலேயே வரு வாய் ஈட்டப்பட்டிருந்தது. நான்காவது காலா ண்டில், ரூ. 1 லட்சத்து 23 ஆயிரம் கோடியாக, சுமார் 5 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது. நிகர லாபத்தைப் பொறுத்தவரை மட்டுமே  பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2021-22 நிதியாண் டின் ஜனவரி - மார்ச் காலாண்டில் பாரத் பெட்ரோ லியம் கார்ப்பரேசன் லிமிடெட் ரூ. 2 ஆயிரத்து  130 கோடியே 53 லட்சம் நிகரலாபம் ஈட்டியுள் ளது. இது, முந்தைய ஆண்டின் நிகர லாபமான  ரூ.11 ஆயிரத்து 940 கோடியே 13 லட்சத்துடன் ஒப்பி டுகையில் 82 சதவிகிதம் குறைவு ஆகும். இதுதவிர, நிறுவனத்தின் பெட்ரோலியப் பொருள்கள் சந்தை விற்பனை கடந்த நிதியாண் டின் கடைசி காலாண்டில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

;