states

img

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இந்தியாவுக்கு எதிராக தீர்மானம்

வாஷிங்டன், ஜூன் 25- இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான மதவெறுப்பு அரசியலுக்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  சோமாலியாவைச் சேர்ந்தவர் இல்ஹன் ஒமர். இவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள் ளார். இல்ஹன் அமெரிக்காவின் ஜனநாயக கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் சென்றார். அப்போது முஸ்லிம்கள், கிறிஸ்த வர்கள், சீக்கியர்கள், தலித்துகள், ஆதிவாசி கள் திட்டமிட்டு குறிவைக்கப்பட்டனர் என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரி வித்திருந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் இல்ஹன் ஒமர் இந்தி யாவுக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளார். இந்தியா மத சுதந்திரத்தில் தலையீடுவதாகவும், மத சுதந்திரத்தை மீறும் வகையில் இந்தியா செயல்படுவதாகவும் இல்ஹன் தனது தீர்மானத்தில் தெரிவித்துள் ளார்.  

மதச் சுதந்திரத்தை மீறும் வகையில் செயல்படும் இந்தியாவை மதச் சுதந்திரத்தை மீறும் ‘கவலைக்குரிய நாடு’ என அமெரிக்க அறிவிக்க வேண்டுமென இல்ஹன் தனது தீர்மானத்தில் தெரிவித்துள்ளார். மோடி ஆட்சி யின் செயல்பாட்டுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இந்தத் தீர்மானத்தை இல்ஹன் சக நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஷிதா தலிப், ஜூயன் வர்கன் ஆகியோரின் ஆதரவோடு பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்துள்ளார்.  இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை சர்வதேச மதச் சுதந்திரம் குறித்த தனது வருடாந்திர அறிக்கையில் “சிறு பான்மை மதங்களும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் சிறுபான்மை மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்” எனக் கூறியிருந்தது.  சிறுபான்மையின மக்கள் மீதும் வழி பாட்டுத் தலங்கள் மீதும் தாக்குதல்கள் அதி கரித்து வருவதாக இந்த ஆண்டின் தொடக் கத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

;